முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமா அல்லது முழு முட்டையும் சாப்பிடலாமா? இது ஒரு விடையில்லா கேள்வி. முட்டையின் வெள்ளைக்கரு மிகவும் ஆரோக்கியமானது என்று சிலர் கூறினாலும், பலர் அதை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.
மஞ்சள் கரு முக்கியமாக கொழுப்பு மற்றும் சில புரதங்களால் ஆனது. அவை பயோட்டின் உட்பட பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன.`
ஒரு முட்டையின் பிரகாசமான மஞ்சள் கருவைச் சுற்றியுள்ள வெள்ளை திரவமானது, சுமார் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 10 சதவீதம் புரதத்தால் ஆனது. பயோட்டின் பிணைப்பு புரதமான அவிடின் அவற்றில் உள்ளது. அதேநேரம், மஞ்சள் கரு கொழுப்பு மற்றும் சில புரதங்களால் ஆனது. அவை பயோட்டின் உட்பட பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன.`
நீங்கள் முடிவெடுப்பதற்கு முன், ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா நீங்கள் அறிந்திருக்க வேண்டிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.
முழு முட்டைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான ஆதாரம் மட்டுமல்ல, இதில் புரதம் மற்றும் கலோரிகள் அதிகளவில் உள்ளன. மறுபுறம், முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின்கள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும்.

நீங்கள் கவனிக்க வேண்டியது இங்கே
முழு முட்டை உடலுக்கு அதிக புரதத்தை அளிக்கும் அதே வேளையில், அவை அதிக கலோரிகளையும் கொண்டு வருகின்றன.
முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதம் ‘உயர்தர முழுமையான புரதம்’ என்றும் கருதப்படுகிறது, அதாவது உடலுக்குத் தேவையான அளவு ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.
எப்படி தேர்வு செய்வது?
முழு முட்டைகளை உண்பது, உங்களை முழுதாக உணர வைப்பதோடு குறைவான கலோரிகளை உட்கொள்ள உதவுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒப்பிடும்போது இது ஊட்டச்சத்துக்களில் அதிக நன்மை பயக்கும் என்றும் அறியப்படுகிறது.
தசையைப் பராமரிப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும், உணவில் போதுமான புரதத்தைப் பெறுவது அவசியம், குறிப்பாக ஒருவர் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது. இதைக் கருத்தில் கொண்டு, எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த வழி என்று கூறலாம்.
முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அனைத்தும் மஞ்சள் கருவில் காணப்பட்டாலும், முட்டையின் வெள்ளைக்கருவில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் அவற்றில் கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரையும் இல்லை.
முட்டையின் வெள்ளைக்கரு’ அதிக புரதம் தேவைப்படுபவர்களுக்கு ஒரு கவர்ச்சியான தேர்வாக இருக்கும், ஆனால் விளையாட்டு வீரர்கள் அல்லது பாடி பில்டர்கள் போன்றவர்கள் அவர்களின் கலோரி உட்கொள்ளலைக் கவனிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“