Advertisment

இரவில் ஓளிரும் செயற்கை விளக்குகள் சுகர் வர காரணமா? புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

சீனாவில் கிட்டத்தட்ட 100,000 ஆண்களும், பெண்களும் வெளியில் இருட்டாக இருக்கும் போது செயற்கை ஒளிக்கு ஆளானதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

author-image
WebDesk
New Update
lifestyle

Artificial Light Can Raise Diabetes Risk: New study reveals

சர்க்கரை நோய்க்கான ஐரோப்பிய சங்கத்தின் இதழான டயபெடோலாஜியாவில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இரவில் செயற்கை விளக்கின் அதிகபட்ச வெளிப்பாடு நீரிழிவு நோய்க்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இரவில் செயற்கை ஒளி (LAN) வெளிப்பாடு பலவீனமான இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் நீரிழிவு நோய்க்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது, சீனாவில்  9 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோய் பாதிப்புக்கு செயற்கை வெளிச்சம் (LAN) ஒரு காரணம் என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

டாக்டர் யூ சூ மற்றும் சீனாவின் இரண்டு சிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அவரது சகாக்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

சீனாவில் கிட்டத்தட்ட 100,000 ஆண்களும், பெண்களும் வெளியில் இருட்டாக இருக்கும் போது செயற்கை ஒளிக்கு ஆளானதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், நமது சர்க்காடியன் தாளத்தைக் கட்டுப்படுத்த உதவும் மெலடோனின் ஹார்மோன், உடலின் உற்பத்தியாவதை இந்த செயற்கை வெளிச்சம் பாதித்தது கண்டறியப்பட்டது.  

மெலடோனின் உற்பத்தியில் குறுக்கிடுவதன் மூலம் 24/7 வாழ்க்கை முறைகள் நமது ஆரோக்கியத்திற்கு அழிவை ஏற்படுத்துகின்றன என்பதற்கான சான்றுகள் வளர்ந்து வருகின்றன.

செயற்கை ஒளியின் நீண்டகால வெளிப்பாடு குளுக்கோஸ் அளவு அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு பாதிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Diabetology இதழில் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, குறைந்த ஒளி மாசு உள்ள பகுதிகளில் வசிப்பவர்களை விட, இரவில் அதிக ஒளி மாசு உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 28% அதிகம்.

இறுதியில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சீனர்களில் 9 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் ,இரவில் வெளிப்புற ஒளி மாசுபாட்டின் காரணமாக இருக்கலாம். மேலும் மக்கள் நகரங்களுக்குச் இடம்பெயரும் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த செயற்கை விளக்குகள் எங்கும் நிறைந்த சுற்றுச்சூழல் ஆபத்து காரணி என்று ஆய்வு கூறுகிறது

நகர்ப்புற ஒளி மாசுபாட்டின் தீவிரம் பெரிய நகரங்களில் வசிப்பவர்களை மட்டுமல்ல, இது ஒளி மூலத்திலிருந்து நூற்றுக்கணக்கான கி.மீட்டர் தொலைவில் இருக்கும் புறநகர் மற்றும் வனப் பூங்காக்கள் போன்ற தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களையும் பாதிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளது.

உலக மக்கள்தொகையில் 80% க்கும் அதிகமானோர் இரவில் ஒளி மாசுபாட்டிற்கு ஆளாகியிருந்தாலும், இந்த பிரச்சனை சமீபத்திய ஆண்டுகள் வரை விஞ்ஞானிகளிடமிருந்து குறைந்த கவனத்தை பெற்றுள்ளது என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment