சுகர் இருக்கிறவங்க பி.பி வராமல் தவிர்ப்பது எப்படி? சித்த மருத்துவர் விளக்கம்
சர்க்கரை நோய் வந்த உடனேயே அடிக்கடி ரத்த அழுத்தத்தை மானிட்டர் செய்ய வேண்டும். ரத்த அழுத்தம் வரக்கூடிய நிலையில் இருந்தால் உணவு முறையில், வாழ்க்கை முறையில் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக உப்பு, எண்ணெய் குறைவாக எடுக்க வேண்டும்.
சர்க்கரை நோய், கல்லீரல் வீக்கம், ரத்த அழுத்தம், உடல்பருமன், கொழுப்பு அனைத்தும் மெட்டபாலிசம் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒன்று வந்தாலும் அடுத்தடுத்து நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்கள் எல்லாமே உடல் பருமன் கொண்டிருப்பவர்களை எளிதாக தாக்கலாம்.
Advertisment
சர்க்கரை நோய் வந்த பிறகு அது கண் மற்றும் சிறுநீரக உறுப்பை பாதிக்கும். சர்க்கரை நோய் உடலில் இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இது endospermic dysfunction diabetes என்று அழைக்கப்படுகிறது.
இரத்த நாளங்கள் அடர்த்தியாகலாம். அதில் கொழுப்பு படிமங்கள் படியலாம். இவை கடினமாகலாம். அதனாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். நீரிழிவு பக்கவிளைவால் சிறுநீரகம் பாதிக்கும் போது, நெப்ரோபதி உண்டாகும் போதும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.
தமனிகளை, பெருந்தமனி தடிப்புத்தோல் அழற்சி என்னும் கடினமான நிலைக்கு தள்ளுகிறது. இதனால் இரத்த அழுத்தம் அபாயம் எளிதாக உருவாகிறது. இது நாளடைவில் இரத்த நாள சேதம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற அபாயத்தை உண்டாக்கும்.
சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்த நோய் எதிர்கொள்ளும் போது உண்டாகும் பிரச்சனைகள்!
சர்க்கரை நோயாளிகள் பொதுவாகவே micro vascular and macro vascular பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். அதாவது சிறிய இரத்தக்குழாய், பெரிய இரத்தக்குழாய் வியாதிகள் என்று பிரித்து சொல்லப்படும்.
சிறிய இரத்தக்குழாய் என்றால் அது கண்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் ஆகும்.
பெரிய இரத்தக்குழாய் என்றால் மாரடைப்பு, பக்கவாதம், கால்களில் இரத்த ஓட்டம் குறையக்கூடிய பிரச்சனை. இவையெல்லாம் சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ள கூடிய பிரச்சனை. இவர்கள் உயர் ரத்த அழுத்தமும் சேர்த்து கொண்டிருந்தால் அவர்கள் இந்த பிரச்சனைகளை தீவிரமாக எதிர்கொள்ளும் அபாயம் உண்டு.
அதே போன்று சர்க்கரை நோய் இல்லாமல் உயர் ரத்த அழுத்தம் மட்டும் இருந்தாலே கூட ஹைபர் டென்ஷன் ரெட்டினோபதி, சிறுநீரக பிரச்சனை வரலாம். நரம்பு சேதம் கூட உண்டாகலாம். பக்கவாதம், மாரடைப்பும் வரலாம். எனினும் சர்க்கரை நோய் சேரும் போது வாய்ப்புகள் அதிகமாக, வேகமாக இருக்கும்.
இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம் வருவதை தடுக்க முடியும்
சர்க்கரை நோய் வந்த உடனேயே அடிக்கடி ரத்த அழுத்தத்தை மானிட்டர் செய்ய வேண்டும்.
ரத்த அழுத்தம் வரக்கூடிய நிலையில் இருந்தால் உணவு முறையில், வாழ்க்கை முறையில் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக உப்பு, எண்ணெய் குறைவாக எடுக்க வேண்டும்.
உடல் எடை அதிகரிக்காமல் கச்சிதமாக வைத்திருக்க வேண்டும். உணவு முறை, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி முறை மூன்றையும் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்.
இதய வால்வுகளில் மகாதமனி பாதிப்பு, மரணத்தையும் உண்டாக்கும்
சிலருக்கு சிறுநீரகத்தில் புரதம் வெளியேறினாலே அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இல்லையென்றாலும் மாத்திரை (ace rd tablet uses) கொடுப்பதுண்டு. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரையுடன் கொழுப்பையும் குறைக்க வேண்டும். புகைப்பழக்கம் இருந்தால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
சிறுநீரக பிரச்சனை இருக்கும் போது, ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைப்பதில் சிக்கல் இருக்கலாம். Endocrine conditions இருக்கும் போதும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்காது. சர்க்கரை நோயும் இதற்கு காரணமாக சொல்லலாம். அது corn syndrome என்று அழைக்கப்படுகிறது. இவர்களுக்கு ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்காது.
சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்தத்தை 130/80 வைத்துகொள்வது நல்லது.
சர்க்கரை கட்டுக்குள் இருந்தாலும் படிப்படியாக ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். அதே நேரம் சர்க்கரை கட்டுக்குள் வைக்க தவறினால் ரத்த அழுத்தம் வேகமாக வரலாம்.
தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார்
சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர் 9344186480
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“