scorecardresearch

பிசிஓடி மற்றும் டயாபட்டீஸ்: யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?

நிபுணர்களின் கூற்றுப்படி, பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்:

health tips
PCOS உள்ள பெண்களும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS), பெண்களிடையே இருக்கும் ஒரு ஹார்மோன் கோளாறு, இது வெளிப்புற விளிம்புகளில் சிறிய நீர்க்கட்டிகளுடன், விரிந்த கருப்பைகளை ஏற்படுத்துகிறது, இது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் பல சந்தர்ப்பங்களில், கருவுறாமையுடன் தொடர்புடையது.

ஆனால், PCOS உள்ள பெண்களும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) படி, ” PCOS கொண்ட பெண்கள், பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்; அவர்களின் உடல்கள் இன்சுலினை உருவாக்க முடியும், ஆனால் அதை திறம்பட பயன்படுத்த முடியாது, இது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

இதேபோல், ஆப்பிள் மற்றும் ஹார்வர்டின் சமீபத்திய ‘மகளிர் சுகாதார ஆய்வு’ பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைகள் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகவும், டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு மூன்று மடங்கு அதிகமாகவும் ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னணி IVF நிபுணரும், ஜீவா ஃபெர்ட்டிலிட்டியின் இயக்குநருமான மருத்துவர் ஸ்வேதா கோஸ்வாமி இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கினார்.

பிசிஓடியும், சர்க்கரை நோயும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஏனெனில் உடலில், வளர்சிதை மாற்ற நோய்க்குறி (metabolic syndrome) எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது. பிசிஓஎஸ் பெண்களின் நாளமில்லா அமைப்பைத் தொந்தரவு செய்கிறது.

யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?

நிபுணர்களின் கூற்றுப்படி, பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்:

* பருமனானவர்கள்

* குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் உள்ளவர்கள்

* ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

* உடற்பயிற்சி செய்யாதவர்கள்

* தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பவர்கள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கோஸ்வாமியின் கூற்றுப்படி, PCOS உள்ள பெண்கள் பின்வரும் வாழ்க்கை முறை குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.

* எடை மேலாண்மை

* கொழுப்பு இழப்பு

*மன அழுத்தம் மேலாண்மை

* வழக்கமான உடற்பயிற்சிகள்

*நல்ல உணவுப் பழக்கம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Health tips in tamil pcod diabetes symptoms precautions

Best of Express