ஃப்ரிட்ஜில் வைத்த காய்கறிகள்... இதில் இவ்ளோ பிரச்னை இருக்குதா?
உறைந்த மற்றும் புதியவை ஒரே மாதிரியாக இருக்கலாம். ஊட்டச்சத்து மதிப்புகள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் அவை எப்போதாவது ஒரே மாதிரியான சுவையுடன் இருக்கின்றனவா?
இப்போதுள்ள பிஸியான வாழ்க்கையில் ஃப்ரோஸன் எனப்படும் உறைந்த உணவுகள் நமது சிறந்த நண்பர்களாகி விட்டனர். அவற்றை சமைப்பது எளிது மற்றும் சுவையானதும் கூட. ஆனால் அவை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புதிய உணவுகளைப் போல ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவையா?
Advertisment
ஆயுர்வேத மருத்துவர் அல்கா விஜயன், உறைந்த மற்றும் புதிய காய்கறிகளுக்கு இடையிலான வித்தியாசம் மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதை விளக்கினார். கீழே பாருங்கள்.
உறைந்த மற்றும் புதியவை ஒரே மாதிரியாக இருக்கலாம். ஊட்டச்சத்து மதிப்புகள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் அவை எப்போதாவது ஒரே மாதிரியான சுவையுடன் இருக்கின்றனவா?
உறைந்தவுடன், உணவுகள் அவற்றின் பிராணனை இழக்கின்றன அதாவது அவை உயிரற்றதாக மாறும்.
எதனால்?
உங்கள் உணவில் அதிக புதிய காய்கறிகளைச் சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது.
*அவற்றின் உயிர்ச்சக்தி பறிக்கப்படுகிறது
*அவை உறைபனியின் செயல்பாட்டில் சாத்வீக குணத்தை இழக்கின்றன
இத்தகைய காய்கறிகள்என்ன செய்யும்:
*குடல் நுண்ணுயிரிகளின் வரம்பைக் குறைக்கும்
*நச்சுகள் உருவாகும்
* செல்களின் மோசமான ஊட்டச்சத்து அளிக்கும்
அதேநேரம் புதிய காய்கறிகள்
* ஜீரணிக்க எளிதானது
* சுவையானது
* ஒவ்வொரு செல்லையும் புத்துயிர் பெற செய்கிறது
சுருக்கமாக, உறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நாம் சில உயிரற்ற, ஊட்டச்சத்து இல்லாத உணவை (பெரும்பாலும் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து என்ற பெயரில்) சாப்பிடுகிறோம், இது ஜீரணிக்க கடினமாக இருப்பது மட்டும் அல்ல நம் உடலை உயிருடன் வைத்திருக்கும் குடல் நுண்ணுயிரியை குறைக்கிறது.
இதை ஒப்புக்கொண்ட ஆயுர்வேத மருத்துவர் அன்ஷு வத்ஸ்யன், ஆயுர்வேதம் 5,000 ஆண்டுகள் பழமையான நடைமுறையாகும், மேலும், உறைந்த உணவு என்ற கருத்து அப்போது இல்லை. மேலும், புதிய உணவுகள் சுவை மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது. புதிய உணவுகளை உட்கொள்வது உங்கள் உடற்தகுதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“