ஜாதிக்காயில் மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், பொட்டாசியம், வைட்டமின் பி1, பி6 மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.
யூகேர்லைஃப் ஸ்டைல்.காம் இணை நிறுவனர் லூக் கவுடின்ஹோ, இந்த “இயற்கையின் பரிசை” எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதை கூறுகிறார். தனது கணுக்காலில் காயம் அடைந்தபோது வலி நிவாரணி மருந்துகளுக்கு பதிலாக இயற்கையாக அதை குணப்படுத்த லூக் விரும்பினார்.
இந்த ஆராய்ச்சியின் போது, ஜாதிக்காயின் வலியைப் போக்க உதவும் பண்புகளை நான் கண்டேன். எனவே, நான் எள் எண்ணெயுடன், ஜாதிக்காய் எண்ணெயில் சில துளிகள் கலந்து என் கணுக்கால் முழுவதும் மசாஜ் செய்தேன். 24 மணி நேரத்தில் வலி மாயமானது. நான் எந்த வலியும் இல்லாமல் விழித்தேன், என் நாளைக் கழித்தேன், என்று அவர் எழுதினார்.
கீல்வாதம், நரம்பியல், ஃபைப்ரோமியால்ஜியா அல்லது மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற பல சுகாதார நிலைமைகள் சில சந்தர்ப்பங்களில் கடுமையான வலியை ஏற்படுத்தலாம் மற்றும் தூக்கத்தில் தலையிடலாம்.
நாட்பட்ட வலி, தசை/நரம்பு/மூட்டு வலி, ஏதேனும் வீக்கம் அல்லது புண், முழங்கை வலி உள்ள போன்ற பல நோயாளிகள் (விளையாட்டு வீரர்களும்) எங்கள் ஜாதிக்காய் எண்ணெய் சிகிச்சையில் உள்ளனர், மேலும் இது வலி மற்றும் வீக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதிசயமானது, என்று அவர் மேலும் கூறினார்.
பல்வேறு ஆய்வுகளின்படி, ஜாதிக்காய் பாலுணர்வு ஊட்டும், தூக்கத்தை தூண்டும், செரிமானத்தை தூண்டும், வீக்கம் எதிர்ப்பு, வாய்வு எதிர்ப்பு, மன அழுத்தம் மற்றும் நரம்பு மண்டலத்தை தளர்த்தும், வாசோடைலேட்டர் போன்ற பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு.
இதில் யூஜெனால், டெர்பென்ஸ் மற்றும் டிரிமிரிஸ்டின் போன்ற இயற்கை இரசாயனங்கள் உள்ளன, அவை தூக்கத்தைத் தூண்டுவதற்கும், சோர்வான தசைகள் மற்றும் நரம்புகளைத் தளர்த்துவதற்கும், அமைதியான உணர்வைத் தருவதற்கும், வலி மற்றும் வீக்கத்தைப் போக்குவதற்கும் காரணமாகின்றன.
அதை எப்படி பயன்படுத்துவது?
நல்ல தரமான ஜாதிக்காய் அத்தியாவசிய எண்ணெயில் 4-5 சொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். எள் அல்லது தேங்காய் எண்ணெயில் இரண்டு டீஸ்பூன் கலக்கவும். தினமும் பாதிக்கப்பட்ட பகுதியில் வெளிப்புறமாக மசாஜ் செய்யவும். முடிவுகளைப் பார்க்க இரண்டு நாட்களுக்கு தினமும் இதைச் செய்யுங்கள்.
தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க லூக், ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடியை, ஒரு கிளாஸ் சூடான பாலில் சேர்க்க பரிந்துரைத்தார். ஒருவேளை உங்களுக்கு பால் ஒத்துக் கொள்ளாது என்றால், அதற்கு பதிலாக பாதாம் பாலை பயன்படுத்தலாம். அல்லது, அதை தேநீராக காய்ச்சி பருகலாம் அல்லது ஒரு தேக்கரண்டி பச்சை தேனுடன் கலந்து சாப்பிடலாம் என்று அவர் கூறினார்.
நிச்சயமாக, நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், கேஜெட்களைத் துண்டிக்க முடியாவிட்டால், மாலையில் காஃபின் அதிகமாக உட்கொண்டால், தூங்குவதற்கு முன் உங்கள் மனதை அமைதிப்படுத்த முடியாவிட்டால், ஜாதிக்காயை உட்கொள்வது மட்டுமே அதைக் குறைக்காது. எனவே ஜாதிக்காய் திறம்பட வேலை செய்ய ஒருவர் வாழ்க்கை முறையுடன் இணைக்க வேண்டும்.
ஒரு சிறிய ஜாதிக்காய் உங்களுக்கு அதிகம் உதவும்.
உங்களுக்கு ¼ டீஸ்பூன்க்கும் குறைவாக மட்டுமே தேவை. அதிகமாக, ஜாதிக்காய் எடுத்துக் கொள்வது இதயத் துடிப்பு, தசை ஒருங்கிணைப்பு இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று லூக் எச்சரித்தார்.
மேலும், அவர் பேட்ச் டெஸ்ட் செய்ய பரிந்துரைத்தார், எப்போதும் ஜாதிக்காய் எண்ணெயை அத்தியாவசிய எண்ணெயுடன் கலக்கவும், காயங்கள் அல்லது வெட்டுக்களில் அதைப் பயன்படுத்த வேண்டாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“