Advertisment

ரத்தத்தை சுத்தப்படுத்தும்; சீசன் நோய்களை விரட்டும் மூச்சுப் பயிற்சி: இந்த வீடியோ பாருங்க!

இருப்பினும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு இது நல்லதல்ல என்று யோகா பயிற்சியாளர் அதிதி ஜவார் கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

This breathing technique can warm your body and keep seasonal flu at bay

குளிர்காலத்தில், பலர் சளி மற்றும் காய்ச்சலால் நோய் வாய்ப்படுகிறார்கள், இது உடலைப் பாதிக்கலாம். யோகா பயிற்சியாளர் அதிதி ஜவார், வானிலை மாற்றங்களால் நோய்வாய்ப்படுவதைத் தடுக்க உதவும் யோகா ஆசனத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

வெளியே கடும் குளிர் நிலவுகிறது. நீங்கள் சளி, இருமல் அல்லது குளிர் காலங்களில் ஏற்படும் பிற காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகக்கூடியவராக இருந்தால், உங்கள் உடலை சூடேற்ற உதவும் ஒரு பிராயணம் இங்கே உள்ளது, என்று அவர் அந்த வீடியோவில் கூறினார்.

மூச்சுதான் மருந்து என்ற அவர் ‘சூரியபேதி பிராணயாமா’ என்ற சுவாச நுட்பத்தை செய்து காட்டினார். இதில் உங்கள் இடது நாசியை சுட்டி விரலால் லேசாக அழுத்தி வலது நாசி வழியாக மூச்சை நல்ல ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். பிறகு வலது நாசியை லேசாக அழுத்தி இடது நாசி வழியாக மூச்சை வெளியே விடவும்.

இதை ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை செய்யலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

அதன் பலன்களை விளக்கிய அவர், சூரியபேதி பிராணயாமம் நமது உடலில் வெப்ப நிலையை செயல்படுத்தி, சூடாக வைக்கிறது. சளி, சைனசிடிஸ், மூச்சுக்குழாய் அழற்சி, கோவிட் மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் போன்ற காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் உங்கள் திறனை மேம்படுத்த உதவுகிறது. இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் அஜீரணத்தின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.

இதை ஒப்புக்கொண்ட யோகா பயிற்சியாளர் இரா திரிவேதி, பிராணயாமா - வலது நாசியில் (சூரிய நாடி என்றும் அழைக்கப்படுகிறது) மட்டுமே கவனம் செலுத்துகிறது - இது ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்ய உதவுகிறது.

இந்த பயிற்சி செரிமான நெருப்பைத் தூண்டுகிறது மற்றும் சரியான செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது செரிமானப் புழுக்களை நீக்குகிறது. வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமான மண்டலத்தை பாதிக்கும் நோய்களை சரி செய்கிறது.

மேலும் திரிவேதி கூறுகையில், சுவாசப் பயிற்சியானது சூரியன் மற்றும் பேதனா ஆகிய இரண்டு வார்த்தைகளில் இருந்து அதன் பெயரைப் பெறுகிறது.  அதாவது ஏதாவது உள்ளே நுழைவது அல்லது துளைப்பது என்று அர்த்தம். இது கூடுதலாக ஒருவரின் சைனஸ் நிலையை மேம்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது முன்பக்க சைனஸை சுத்தப்படுத்துகிறது, மேலும் உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

இருப்பினும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படவில்லை என்று அதிதி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment