கொரோனா நோயாளிகளுக்கான வீட்டு தனிமையின் கால அளவு எவ்வளவு? புதிய வழிகாட்டுதல்கள் இதோ…

When can a COVID patient discontinue home isolation: ஒரு கொரோனா நோயாளி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால், அறிகுறிகள் தோன்றியதிலிருந்து அல்லது அறிகுறியற்றவர்கள் பரிசோதனை செய்த 10 நாட்களுக்கு பின்னர் வீட்டு தனிமையை நிறுத்தலாம் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

When can a COVID patient discontinue home isolation: ஒரு கொரோனா நோயாளி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால், அறிகுறிகள் தோன்றியதிலிருந்து அல்லது அறிகுறியற்றவர்கள் பரிசோதனை செய்த 10 நாட்களுக்கு பின்னர் வீட்டு தனிமையை நிறுத்தலாம் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
கொரோனா நோயாளிகளுக்கான வீட்டு தனிமையின் கால அளவு எவ்வளவு? புதிய வழிகாட்டுதல்கள் இதோ…

அறிகுறியில்லாத அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்ட கொரோனா நோயாளிகளை வீட்டிலேயே தனிமையில் இருக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் தனிமைப்படுத்தல் எவ்வளவு காலம் அவசியம்? எல்லா அறிகுறிகளும் தணிந்த பின்னரும் ஒருவர் தொடர்ந்து வீட்டில் தனிமையில் இருக்க வேண்டுமா?

Advertisment

புதிய வழிகாட்டுதல்களில், ஒரு கொரோனா நோயாளி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால், அறிகுறிகள் தோன்றியதிலிருந்து அல்லது அறிகுறியற்றவர்கள் பரிசோதனை செய்த 10 நாட்களுக்கு பின்னர் வீட்டு தனிமையை நிறுத்தலாம் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

வீட்டு தனிமை காலம் முடிந்ததும் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஒரு நோயாளி வீட்டு தனிமையை சரியாகப் பின்பற்றுகிறாரா என்பதை உறுதிப்படுத்த ஒரு மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. "மருத்துவரின் மேற்பார்வையிலோ அல்லது அவரிடம் கலந்தாலோசித்த பின்னர் வீட்டு தனிமைபடுத்தலை பின்பற்றப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. இது நோயாளிக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான மீட்புக்கு உதவும் மற்றும் மீட்பு கட்டத்தில் ஆபத்து காரணிகளை மதிப்பிடுவதற்கும் உதவும் ”என்று புது டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைகளின் சுவாச மற்றும் நுரையீரல் பராமரிப்பு பிரிவு மூத்த ஆலோசகர், டாக்டர் நிகில் மோடி, இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

வீட்டில் தனிமையில் இருக்கும்போது, ​​ஒரு நோயாளி சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி கொரோனா தடுப்பு  நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்:

* நோயாளி தன்னை மற்ற வீட்டு உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், ஒரு தனி அறையில் தங்கியிருக்க வேண்டும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக நோய் போன்ற நோயுற்ற நிலைமைகளைக் கொண்ட வீட்டிலுள்ள மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

* நோயாளியை நன்கு காற்றோட்டமான அறையில் வைக்க வேண்டும், மேலும் புதிய காற்று உள்ளே வர ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும்.

* நோயாளி எல்லா நேரங்களிலும் மூன்று அடுக்கு மருத்துவ முகக்கவசத்தைப் பயன்படுத்த வேண்டும். எட்டு மணிநேர பயன்பாட்டிற்குப் பிறகு அல்லது அதற்கு முன்னர் அவை ஈரமாகிவிட்டால் அல்லது மாசடைந்து விட்டால் முகக்கவசத்தை நிராகரிக்கவும். நோயாளியை பராமரிப்பவர் நோயாளியின் அறைக்குள் நுழைந்தால், பராமரிப்பாளர் மற்றும் நோயாளி இருவரும் N95 முகக்கவசத்தைப் பயன்படுத்தலாம்.

* 1 சதவீத சோடியம் ஹைபோகுளோரைட்டுடன் கிருமி நீக்கம் செய்த பின்னரே முகக்கவசத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

* நோயாளி நன்கு ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் போதுமான நீரேற்றத்தை பராமரிக்க நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* எல்லா நேரத்திலும் மூச்சு பயிற்சியை பின்பற்றவும்.

* தனிப்பட்ட பொருட்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.

* குறைந்தது 40 விநாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கை கழுவுதல் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடிசைர் மூலம் சுத்தம் செய்யுங்கள்.

* 1% ஹைபோகுளோரைட் கரைசலுடன் அறையில் அடிக்கடி தொடும் பொருட்கள் (டேப்லெட்டுகள், கதவு கைப்பிடிகள், ஹேண்டில்கள் போன்றவை) மற்றும் மேற்பரப்புகளை சுத்தம் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.

* ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டருடன் இரத்த ஆக்ஸிஜன் செறிவூட்டலின் சுய கண்காணிப்பு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Covid 19 Wear Mask In Home

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: