புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்று அனைவரும் சொல்லக் கேட்டிருப்போம். ஆனாலும் நமக்கு பரீட்சையம் இல்லாத உணவை தொட்டுப் பார்க்கவும் நமக்கு ஏதோ போன்ற உணர்வு இருக்கும். இது உங்களுக்கு மட்டும் அல்ல. பெரும்பாலான நபர்களுக்கு இது இருக்கிறது. தென்னிந்திய பாரம்பரிய உணவுகளிலேயே இது கிடைக்கிறது என்றால் நாம் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம். உங்களுக்காக மிகவும் எளிமையான,, புரதம் நிறைந்த நிலக்கடலை தோசை எப்படி செய்வது என்பதை இங்கே நாம் காணப் போகின்றோம்.
Advertisment
தேவையான பொருட்கள்
அரைக் கப் நிலக்கடலை வறுத்து ஊற வைத்தது இஞ்சி தேவையான அளவு பச்சை மிளகாய் தேவையான அளவு தண்ணீர் 1 கப் அரைக் கப் கடலை மாவு அரைக் கப் அரிசி மாவு உப்பு தேவையான அளவு மஞ்சள் சீரகம் எண்ணெய் தேவையான அளவு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்
செய்முறை
ஊறவைத்த நிலக்கடலையை இஞ்சி, பச்சை மிளகாய், முக்கால் கப் தண்ணீர் உற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அந்த மாவில் 1/2 கப் கடலை மாவு, 1/2 கப் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, , மஞ்சள், 1 டீஸ்பூன் சீரகம் மற்றும் 1/4 கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் நன்றாக அரைக்கவும். உங்களுக்கு அரிசி மாவு மட்டும் போதுமென்றால் அதனையே பயன்படுத்ஹ்டிக் கொள்ளலாம்.
தற்போது அடுப்பில் தோசை சட்டியை வைத்து, சிறிது எண்ணெய் விட்டு பிறகு தோசையை ஊற்றவும். பிறகு அதில் சிறிது சிறிதாக வெட்டப்பட்ட தக்காளி, வெங்காயம் மற்றும் மல்லி இலைகளை தூவி வேக விடவும். தோசை ஒரு பக்கம் நன்றாக வெந்தவுடன், அதனை திருப்பி போட்டு மீண்டும் வேக விடவும். கோல்டன் ப்ரவுன் நிறத்திற்கு தோசை வந்தவுடன் மீண்டும் திருப்பி போட்டு கல்லில் இருந்து எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil