புதிய தொழில்நுட்பங்கள் தோன்றி சமையல் உலகம் வளர்ந்து வருவதால், பல புதுமையான சமையல் முறைகள் தோன்றியுள்ளன. சரியான சமையல் முறை உணவின் சுவையை மட்டும் பாதிக்காது, இது உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் உறுதி செய்கிறது.
மறுபுறம், தவறான சமையல் முறை உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
சமீபத்தில், ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா ஒருவர் தவிர்க்க வேண்டிய சமையல் முறைகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஏர் ஃபிரையிங்
இறைச்சி மற்றும் சீஸ் போன்ற உணவுகள் ஏர் ஃபிரையிங்கில் சமைக்கும் போது அதன் ஊட்டச்சத்து குறையும். ஏர் ஃபிரையிங் போன்ற டிரை குக்கிங் மெத்தட்ஸ் மூலம் உணவுகள் அதிக வெப்பநிலைக்கு வெளிப்படும் போது, அட்வான்ஸ்டு கிளைகேஷன் எண்ட்-ப்ராடக்ட்ஸ் (AGEs) உற்பத்தி செய்யப்படுகின்றன.
கூடுதலாக, நீங்கள் ஏர் பிரையரில் உணவுகளை வறுக்கும்போது, சூடான காற்று உணவைச் சமைக்கச் செல்கிறது, இது சில சமயங்களில் உணவை முழுமையாக சமைப்பதில்லை.
இருப்பினும், உணவியல் நிபுணர் ஜோயா சர்வே (Head Dietician, Bhatia Hospital, Mumbai) கூறுகையில், ஏர் பிரையர் உணவை சமைக்க குறைந்த வெப்பத்தைப் பயன்படுத்துகிறது, இதன் மூலம் டீப் ஃபிரையிங் செய்யும், எண்ணெயில் 70 முதல் 80 சதவிகிதம் குறைகிறது.
ஆய்வின்படி, ஏர் பிரையர் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் அக்ரிலாமைடு (acrylamide) என்ற வேதிப்பொருளைக் குறைக்கிறது. மாவுச்சத்துள்ள உணவுகளை (starchy foods) வறுக்கும்போது இந்த ரசாயன கலவை வெளிப்படுகிறது, என்று அவர் மேலும் கூறினார்.
இதேபோல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர் பவிஷா குமான் கூறுகையில், (Nutritionist & Dietician, Jaslok Hospital & Research Centre) கூறுகையில், ’டீப் ஃபிரையிங் உடன் ஒப்பிடும்போது ஏர் ஃபிரையிங் அதிக சத்துக்களை தக்க வைக்க உதவும்.
குறைந்த சமையல் நேரம் மற்றும் ஏர் பிரையரில் சமைக்கும் போது குறைந்த வெப்ப வெளிப்பாடு ஆகியவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பாதுகாக்க உதவுகின்றன, அவை மற்ற சமையல் முறைகளால் குறைக்கப்படலாம்.
இருப்பினும், டீப் ஃபிரையிங் சமையலுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மாற்றாக ஏர் ஃபிரையிங் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“