சரியாக சாப்பிடுவது என்பது சரியான வகையான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் ஆரோக்கியமான உணவை தினசரி அடிப்படையில் சமைப்பது பற்றியது. திறமையான பிரபல இந்திய செஃப் ரன்வீர் பிரார், அந்த வாழ்க்கை முறையை அடைய உங்களுக்கு உதவுவதற்காக சில சமையல் வித்தைகளை கூறியுள்ளார்.
ப்ரேக்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஸ்நாக் அட்டாக், ஹோம்மேட், தி கிரேட் இந்தியன் ரசோய், ஹெல்த் பி டேஸ்ட் பி மற்றும் ரன்வீர்ஸ் கஃபே போன்ற பல பிரபலமான உணவு நிகழ்ச்சிகளில் ரன்வீர் பங்கேற்றுள்ளார். அவருடைய ஆரோக்கியமான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவோம்.
கிரீம் வேண்டாம்!
கிரீம்க்கு பதிலாக விஸ்க்டு தயிர்(whisked yogurt) பயன்படுத்த ரன்வீர் ஆலோசனை கூறுகிறார். பல இந்திய ரெசிபிகளில் சமையல் க்ரீம்’ உணவுகளின் செழுமையை அதிகரிப்பதற்கும், அமைப்பை மிருதுவாகவும் கிரீமியாகவும் மாற்றுவதற்கு ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. ஆனால் நீங்கள் தயிர் மூலம் அதே முடிவுகளை அடைய முடியும். "இது கொழுப்பை கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைக்க உதவுகிறது" என்கிறார் ரன்வீர்.
சிவப்பு அரிசிக்கு வணக்கம்!
வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு அரிசி பயன்படுத்தலாம். "சிவப்பு அரிசி ஒரு ஆரோக்கியமான தேர்வு மற்றும் இப்போதெல்லாம் எளிதாகக் கிடைக்கிறது" என்கிறார் ரன்வீர். சிவப்பு அரிசி, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால், உங்களை முழுதாக உணர வைப்பதன் மூலம் உங்கள் எடையைக் கட்டுப்படுத்துகிறது.
30 நாள் திட்டம்
ரன்வீர் எப்போதும் 30-30-30 ஃபார்முலாவைப் பின்பற்றுமாறு மற்றவர்களை அறிவுறுத்துகிறார், அதை அவர் தீவிரமாக நம்புகிறார். 30 நாட்களுக்கு சீசனில் இருப்பதையும், நம் நகரத்திலிருந்து 30 மைல்களுக்குள் விளையும் காய்கறிகளையும் (ஆம், பெருநகரங்களில் இது ஒரு சவாலாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்) மற்றும் 30 சதவீத பச்சை பழங்கள் மற்றும் காய்கறிகளை நம் உணவில் சேர்க்க வேண்டும் என்று ஃபார்முலா பரிந்துரைக்கிறது. "இதன் பொருள் நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புதிய, ஆரோக்கியமான மற்றும் பருவகால உணவுகளை சாப்பிடுகிறீர்கள்" என்று இளைய செஃப் ப்ரார் விளக்குகிறார்.
முன்கூட்டியே ஊறவைக்கவும்
பருப்பு வகைகள், தானியங்கள், பீன்ஸ் அனைத்தையும் முன்கூட்டியே ஊற வைக்கவும். " முன்கூட்டியே ஊறவைப்பது ஒரு நல்ல பழக்கமாகும், ஏனெனில் இது சமைக்கும் நேரத்தை குறைக்கிறது, ஆரோக்கியமான நொதிகளைத் தூண்டுகிறது மற்றும் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது," என்று அவர் வலியுறுத்துகிறார்.
இனிமையான தொடுதல்
வீட்டில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பச்சை சர்க்கரை (Raw sugar) பயன்படுத்தலாம்.. "பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை விட பச்சை சர்க்கரை எப்போதும் சிறந்தது" என்கிறார் செஃப் ப்ரார். கலோரிகள் இன்னும் ஒரே மாதிரியாக இருக்கும் போது, மூல சர்க்கரை குறைவான சுத்திகரிப்பு செயல்முறைகளை கடந்து செல்வதால், அது சுவையில் மாறுபடும் மற்றும் பழுப்பு சர்க்கரை போன்றது. இதனால் சுவை பாதிக்கப்படுகிறது. எனவே உங்களுக்கு அதே அளவு தேவையில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.