மக்கா சோளத்தில் சுவை மற்றும் ஆரோக்கியமான அடை தோசை செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மக்கா சோள ரவை – 1 கப்
தயிர் – அரை கப்
கேரட், குடைமிளகாய்- 1 கப்
வெங்காயம் – பொடியாக நறுக்கியது- 1 கப்
பச்சை மிளகாய் – 1
பன்னீர் – சிறிதளவு துருவியது
அரிசி மாவு – 3 கரண்டி
செய்முறை
முதலில் மக்காசோள ரவை எடுத்து அதில் தயிர் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், பன்னீர் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து இவற்றை வதக்க வேண்டும்.
பின்னர், வதக்கிய காய்கறிகளை ஊற வைத்த மாக்காச் சோள ரவையுடன் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கிளறவும். அடுத்து அதில் கட்டி ஆகாமல் கொஞ்சம் கொஞ்சமாக அரிசி மாவு, தேவையான உப்பு சேர்த்து கிளறவும். அடைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் இந்த அடைமாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவை, ஆரோக்கியமான மக்காள சோள அடை தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“