நாம் எல்லோரும் ஆரோக்கியமான உணவை தேடிக் கொண்டிருக்கிறோம். அதுவும் குழந்தைகள் விஷயத்தில் நாம் மிகுந்த கவனமுடன் இருப்போம். ஆனால் சிற்றுண்டிகள் விஷயத்தில் நாம் குழந்தைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு நம்மால் சிறந்த சிற்றுண்டிகளை செய்ய, இந்த அவசர யுகத்தில் நமக்கு நேரமில்லை. ஆனால் நம் பாரம்பரியங்களில் நல்ல சத்தான, எளிதில் செய்யக்கூடிய சிற்றுண்டி வகைகள் நிறைய உண்டு. அவற்றில் ஒன்றுதான் தேங்காய் அவுல்.
இந்த தேங்காய் அவுலை காலை மாலை என இரண்டு வேளைகளிலும் சாப்பிடலாம். காலையில் இட்லி, தோசை போன்ற உணவுகளை விரும்பாதவர்கள் அல்லது தவிர்க்க நினைப்பவர்களுக்கு அவுல் சிறந்த மாற்றாக இருக்கும். இப்போது தேங்காய் சேர்த்த அவுல் உணவை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அவுல் – 3 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
நாட்டு சர்க்கரை – 1 கப்
சுக்கு ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அவுலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் கொதிக்கின்ற நீரை ஊற்றி, ஒரு அரை மணி நேரத்திறகு மூடி வைக்க வேண்டும்.
அவுல் நன்றாக ஊறிய பிறகு, அதில் தேங்காய் துருவல், சுக்கு ஏலக்காய் பொடி மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் தேங்காய் அவுல் ரெடி! சில நிமிடங்களிலே செய்யக் கூடிய இந்த சத்தான உணவை அனைவரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் நாட்டுச் சர்க்கரை மற்றும் தேங்காயை தேவையான அளவு மட்டும் சேர்த்து சாப்பிடுங்கள்.
இந்த அவுல் உணவுக்கு தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு நாம் பயணங்களின் போது எளிமையாக இந்த அவுலை செய்து சாப்பிடலாம். உங்களுக்கு சூடான நீர் கிடைக்கவில்லை என்றால் சாதாரண தண்ணீரயும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil