Healthy food news in tamil: தயிர் நம் உடலுக்கு பல வகைகளில் பயன் தருகிறது. எனவே தயிர் சாப்பிடுவதை நம்மில் பலர் விரும்புவோம். அதுவும் கலப்படமற்ற, வீட்டிலே தயார் செய்யப்பட்ட தயிரை விரும்பி உண்போம். அப்படி கலப்படமற்ற தயிர் தயாரிப்பது குறித்தும் தயிரின் நன்மைகள் குறித்தும் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர், சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
“தயிர் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், எடை குறைப்பதை ஊக்குவிக்கவும் உதவுகிறது” என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறியுள்ளார்.
நம்முடைய வீட்டிலே கலப்படமற்ற மற்றும் ஆரோக்கியமான தயிர் தயார் செய்ய ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் எளிய செய்முறையை இங்கு கொடுத்துள்ளார். அதோடு திராட்சையைக் கொண்டு வீட்டில் தாயார் செய்யப்படும் தயிர் நார்ச்சத்து அதிக உள்ளதாகவும், உடலுக்கு குளிர்ச்சி தரவல்லதாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திராட்சை – தயிர் பயன்கள்
– கெட்ட பாக்டீரியாவை செயல்படுவதில் இருந்து தடுக்கிறது.
– நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
– குடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது.
– உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
– எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்ல வலு தருகிறது.
திராட்சை – தயிர் அமைப்பதற்கான செய்முறை
ஒரு கிண்ணத்தில் கொதிக்க வைத்து குளிரூட்டப் பட்ட பாலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் நான்கைந்து திராட்சை பழங்களை சேர்க்க வேண்டும். கருப்பு திராட்சையாக இருந்தால் மிக நல்லது. பின்னர் அதில் சிறிதளவு மோர் அல்லது தயிர் சேர்க்க வேண்டும். இப்போது அதை 32 முறை ஒரு ஸ்புனால் நன்றாக கலக்க வேண்டும். பின்பு அதை ஒரு மூடியால் மூடி 8 முதல் 12 மணி நேரம் வரை தனித்து வைக்கவும். அதன் பின் நீங்கள் சேர்த்த கலவையை பார்க்கும் போது அதன் மேல் அடுக்கு தடிமனாக தோன்றும். இப்போது நீங்கள் தாயார் செய்த தயிர் சாப்பிட தயாராக இருக்கும். அதை மதிய உணவுடன் அல்லது மதிய உணவுக்கு பின் பிற்பகல் 3-4 மணி மேல் சாப்பிடலாம்.
இந்த திராட்சை தயிரில், திரட்டாசை மட்டுமல்லாமல் பேரீச்சை பழங்களையும் சேர்த்து அனைவரும் உண்ணலாம். குறிப்பாக பேரு காலத்தில் உள்ள பெண்கள் சாப்பிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil