பீன்ஸ்… உ.கிழங்கு… சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ்; சுலப செய்முறை

How to make Herbed Beans with Potatoes tamil news: சுலபமாக சமைக்கக்கூடிய காய்கறி, உருளைக்கிழங்குடன் கூடிய ஹெர்பெட் பீன்ஸ். இவற்றை சூடான சப்பாத்திகளுடன் சேர்த்து சாப்பிடால் செம டேஸ்டியாக இருக்கும்.

சுலபமாக சமைக்கக்கூடிய காய்கறி, உருளைக்கிழங்குடன் கூடிய ஹெர்பெட் பீன்ஸ். இவற்றை சூடான சப்பாத்திகளுடன் சேர்த்து சாப்பிடால் செம டேஸ்டியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

250 கிராம் பிரஞ்சு பீன்ஸ் – 2 – நீளமான, துண்டுகளாக வெட்டவும்
2 நடுத்தர உருளைக்கிழங்கு – மெல்லிய நீண்ட துண்டுகளாக வெட்டவும்,
2 – டீஸ்பூன் வெண்ணெய்,
1 – டீஸ்பூன் எண்ணெய்
1 – தேக்கரண்டி வெங்காய விதைகள் (கலோஞ்சி),
2-3 உலர்ந்த சிவப்பு மிளகாய் – துண்டுகளாக உடைக்க வேண்டும்,
6-8 செதில்களாக பூண்டு – நறுக்கியது (1 டீஸ்பூன்)
2 – டீஸ்பூன் நறுக்கிய புதிய கொத்தமல்லி,
2 -டீஸ்பூன் நறுக்கிய புதிய புதினா
1- தேக்கரண்டி சர்க்கரை, நாட்டு சர்க்கரை
¾ தேக்கரண்டி உப்பு,
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

நீங்கள் செய்ய வேண்டியது

* கொத்தமல்லி, புதினா, சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

* வெண்ணெய் மற்றும் எண்ணெயை ஒரு நான்-ஸ்டிக் அல்லது ஒரு வோக்கில் சூடாக்கவும். அவை சூடான பிறகு தனலை குறைக்கவும். பின்னர் வெங்காய விதைகள், சிவப்பு மிளகாய் மற்றும் பூண்டு சேர்க்கவும். அதன் பிறகு குறைந்த தனலில் ½ நிமிடம் அவற்றை கிளறவும்.

* உருளைக்கிழங்கைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் தொடர்ந்து கிளறவும். உருளைக்கிழங்கு மொறுமொறு என்று வரும் அளவிற்கு அவற்றை 5-7 நிமிடங்கள் மூடி வைத்து நன்றாக சமைக்கவும்.

*அதன் பின் பிரஞ்சு பீன்ஸ் மற்றும் ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து, நடுத்தர தனலில் 3-4 நிமிடங்கள் வறுக்கவும். அதன் பிறகு அவற்றை மூடி வைத்து மொறுமொறு என்று ஆகும் வரை 2-3 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.

* பிறகு கொத்தமல்லி-புதினா கலவையைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலக்கவும்.இப்பொது சூடாக ரொட்டியுடன் அல்லது இந்திய உணவோடு ஒரு சைட் டிஷ் ஆக பரிமாறி உண்ணலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Web Title: Healthy food recipes tamil news how to make herbed beans with potatoes

Next Story
கூகுளின் கலக்கல் டூடுல் முதல் டிடியின் மெசேஜ் வரை – உலக மகளிர் தின கொண்டாட்டங்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com