/tamil-ie/media/media_files/uploads/2021/04/rajini-47.jpg)
Healthy food tamil news: கொத்தமல்லி இலை ஒரு பிரபலமான மூலிகை ஆகும். இவை பெரும்பாலும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் வசிக்கும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இவை பொதுவாக கொத்தமல்லி அல்லது தானியா பட்டா என அழைக்கப்படுகிறது.
கொத்தமல்லி இலை - மூலிகை
கொத்தமல்லி இலைகள் பெரும்பாலான இந்திய சமையலறைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. மேலும் இது பெரும்பாலும் கறி, சாலட் மற்றும் சூப்களை அலங்கரிக்க பயன்படுகிறது.
கொத்தமல்லி இலைகள், வேர்க்கடலை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றோடு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து வாய்நாற்றம் போக்கும் பற்பசையாக பயன்படுத்தலாம்.
கொத்தமல்லி சட்னி சாண்ட்விச்களை சுவையூட்டும் சைடிஷாக பயன்படுகிறது. சிறிதளவு கொத்தமல்லி இலைகளை புதினா இலைகளுடன் அரைத்து சிக்கன் ரைஸ் பேஸ்ட் ஆக பயன்படுத்தலாம்.
பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் சிறந்த ஆதாரமாக கொத்தமல்லி உள்ளது. அழுக்கை அகற்றவும், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்ககூடிய பூச்சிக்கொல்லிகளிலிருந்து விடுபடவும் கொத்தமல்லி உதவுகிறது.
கொத்தமல்லியின் தனித்துவமான மணம் மற்றும் நறுமண சுவையைத் தக்கவைத்துக்கொள்வதால், இது புதியதாக இருக்கும்போது சிறந்தாக உள்ளது. புதிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகள் பச்சை சாலட்டுக்குகளுடன் சேர்த்து சாப்பிடும் போது கூடுதல் சுவை தருகிறது.
ஆரோக்கியத்திற்குஉகந்த மற்றும் அவசியமான ஃபோலிக்-அமிலம், வைட்டமின்-ஏ, பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்-சி உள்ளிட்ட பல முக்கிய வைட்டமின்களிலும் இது நிறைந்துள்ளது. வைட்டமின்-சி ஒரு சக்திவாய்ந்த இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும். கொத்தமல்லி இலைகள் தினசரி பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் சி அளவுகளில் 30% வழங்குகிறது.
கொத்தமல்லி இலையின் ஆரோக்கிய நன்மைகள்
கொத்தமல்லி இலையின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு திறன், கீல்வாதத்தின் அறிகுறிகளைச் சமாளிக்க உதவுகிறது. இது எச்.டி.எல் கொழுப்பை (நல்ல வகை) அதிகரிக்கிறது, மேலும் எல்.டி.எல் கொழுப்பை (கெட்ட வகை) குறைக்கிறது. கொத்தமல்லி இலைகள் வயிற்று அஜீரண பிரச்சினைகள் மற்றும் பலவற்றிலிருந்து பெரும் நிவாரணத்தை அளிக்கின்றன.
கொத்தமல்லி இலைகள் குமட்டல் உணர்வுகளை குறைக்க உதவுகிறது. இது வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது என்றும் ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொத்தமல்லியின் பக்க விளைவுகள்
கொத்தமல்லி செடியின் பச்சை இலைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காகவும், சூப்கள், சாலடுகள் மற்றும் கறிகளுக்கு தனித்துவமான சுவையை வழங்குவதற்கும் நன்கு அறியப்பட்டவை. இவற்றின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக, உடலில் இருந்து பாதரசம் மற்றும் ஈயம் போன்ற உலோகங்களை அகற்ற உதவுகிறது.
கொத்தமல்லி செடியின் இலைகள் சாதாரண தரத்தில் உட்கொள்ளும்போது பாதுகாப்பாக இருக்கக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இவற்றை அதிகமாக உட்கொண்ட பிறகு உணவு ஒவ்வாமை போன்ற சம்பவங்கள் ஏற்படும்.
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்து இணையதளத்தில் கட்டுரை வெளியிடும் வெப்எம்டியின் கூற்றுப்படி, ஒரு மனிதன் கொத்தமல்லி உட்கொண்ட பிறகு படை நோய், தொண்டை வீக்கம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றை உருவாக்கியதாக தகவல்கள் வந்துள்ளன. மற்றொரு சம்பவத்தில், 10 சதவிகித கொத்தமல்லி சாற்றில் 200 மில்லி 7 நாட்களுக்கு நேராக எடுத்துக் கொண்ட ஒரு பெண், பக்கவிளைவுகளைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு தீவிர வயிற்றுப்போக்கை அனுபவித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயிற்று வலி, மனச்சோர்வு, நீரிழப்பு மற்றும் சருமத்தின் கருமை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது
மேலும், நீங்கள் உணர்திறன் வாய்ந்த தோலைக் கொண்டிருப்பவராகவும், படை நோய் ஏற்படுபவராகவும் இருந்தால் கொத்தமல்லி இலையை தவிர்த்தல் நல்லது. மேலும் கொத்தமல்லியைத் தொட்ட பிறகு உங்கள் தோல் அரிப்பு ஏற்படுகிறது என்று நீங்கள் உணர்ந்தால், நுகர்வுக்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அதோடு கொத்தமல்லி சாப்பிடுவது உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாக உணர்ந்தால், பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவர் அல்லது பிற சுகாதார நிபுணரை அணுக வேண்டும்.
இந்த கொத்தமல்லி மூலிகையை உங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம். மேலும் இதை உங்கள் சமையலறையின் ஒரு பகுதியாக ஆக்கி, உங்கள் உணவில் அதிக சுவையை சேர்க்கலாம். அதோடு அதன் சுகாதார பண்புகளிலிருந்து நன்மைகளைப் பெறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.