Healthy food Tamil News: இரவு நேரங்களில் ஹெவி மீல்ஸ் சாப்பிட வேண்டாம் என நினைக்கும் நீங்கள் இட்லி, தோசை மற்றும் பல சிற்றுண்டிகளை தெரிவு செய்து கொள்ளலாம். இவற்றுக்கு சைடு டிஷ் தேடி அலைய வேண்டுமே என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கான எளிய சைடு டிஷ்யை இங்கு பரிந்துரை செய்துள்ளோம்.
அந்த சைடு டிஷ்களில் ஒன்று தான் எள்ளுப் பொடி. நீங்கள் இட்லி, தோசைக்கு ஏற்கனவே பல பொடிகளை பயன்படுத்தி வருபவர்கள் என்றால், ஒரு மாற்றத்திற்கு இந்த டேஸ்டியான எள்ளுப் பொடியை ஒரு முறை முயற்சிக்கலாம். இதை தயார் செய்ய பல மணி நேரங்கள் செலவிட தேவையில்லை. சில நிமிடங்ககளிலேயே தயார் செய்து தோசை, இட்லியுடன் சேர்த்து உண்ணலாம்.
எள்ளுப் பொடி தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் - 1 கப்
உளுந்தம் பருப்பு - 3/4 கப்
கடலை பருப்பு - ¼ கப்
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 6-7
கறிவேப்பிலை - 10-12
அசாஃபோடிடா / பெருங்காயம் - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
நீங்கள் செய்ய வேண்டியது
அடுப்பில் குறைந்த அளவு தீ வைத்து, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகிய இரண்டையும், தனித்தனியாக, அவற்றின் கலர் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அவற்றோடு உலந்த சிவப்பு மிளகாயை எடுத்து, அதன் மணம் வரும் வரை வறுக்கவும். தொடர்ந்து கறிவேப்பிலை அதில் இட்டு, சிறிது சுருட்டத் தொடங்கும் வரை உலர்ந்த வறுவல் வறுக்கவும். இறுதியாக, உலர்ந்த எள்ளை பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வறுக்கவும்.
இப்போது அடுப்பை அனைத்து, பெருங்காய பொடியை சேர்க்கவும். அது எள் பொடியில் உள்ள சூட்டில் நல்ல மணம் கொடுக்கும். அவற்றை கலந்த பின்னர், நன்றாக குளிவிக்கவும். பின்னர் அவற்றை எடுத்து தூளாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பொடியை மிக்சியில் அரைக்கும் போது கவனமாக அரைக்க வேண்டும். ஏனென்றால் மிக்சி சூடாக வாய்ப்புகள் உள்ளது.
பொடியை நன்றாக அரைத்த பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்த, தேங்காய் எண்ணெயுடன் தோசை, இட்லிகளுடன் பரிமாறவும்.
பின்குறிப்பு:
வெள்ளை எள் விதைகளுக்கு பதிலாக கருப்பு எள் விதைகளைப் நீங்கள் பயன்படுத்தலாம். கருப்பு எள் பயன்படுத்தும் போது பொடி கறுப்பானதாக இருக்கும். மற்றும் சுவை மிகவும் வலுவாக இருக்கும்.
காரம் அதிகம் சேர்ப்பவராக இருந்தால், கூடுதலாக சில சிவப்பு மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் பொருட்களை வறுக்கும் போது குறைந்த தீயில் வைத்து வறுக்கவும். இதற்கு அதிக நேரம் எடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அது தான் இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.