Healthy food tamil news: தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுவது இட்லி. மென்மையான மற்றும் பஞ்சு போன்ற தன்மையை கொண்டுள்ளதால் இது அனைவராலும் விரும்பப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்களில் சிலர் இவை இந்தோனேசிய உணவு பழக்கங்களில் இருந்து வந்தவை என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் சிலர் இட்லியின் பிறப்பிடம் தென்னகம் தான் என்று கூறுகிறார்கள் எதுவாக இருந்தாலும் தென்னிந்தியாவில் இட்லி பிடிக்காதவர்கள் எவரும் இலர்.
இட்லி விரும்பி சாப்பிடும் நாமக்கு அதை எவ்வாறு தயார் செய்வது என்று நம்மில் பலருக்கு தெரியாது. எனவே தான் இட்லி செய்வதற்கான எளிய செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.
பஞ்சு போன்ற இட்லி தயார் செய்வது எப்படி?
* இட்லி செய்வதற்கு இரண்டு மிக முக்கியமான பொருட்கள் தேவை. அவை தான் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு. பஞ்சு போன்ற இட்லிகளுக்கு, இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசியைப் பயன்படுத்த வேண்டும். அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு 2:1 விகிதத்தில் சேர்க்க வேண்டும்.
* நம்முடைய வீடுகளில் பாரம்பரியமாக உளுந்த பருப்பு தான் பயன்படுத்தி வருகிறோம். எனவே அதையே நாம் இந்த செய்முறைக்கு பயன்படுத்தலாம்.
*சிறிதளவு ஊறவைத்த வெந்தயம் பயன்படுத்தினால், இட்லிக்கு பஞ்சு போன்ற தன்மையை கொடுக்கும். இது ஆரோக்கியமானது மற்றும் நொதித்தலுக்கு உதவுகிறது. ஆனால் நீங்கள் அதை அதிகமாகப் பயன்படுத்தினால், இட்லி கசப்பாக இருக்கும். நீங்கள் உண்மையிலேயே வெள்ளை கலரில் உள்ள இட்லியை விரும்பினால், வெந்தய விதைகளைத் தவிர்க்கலாம்.
* மற்ற உப்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, கல் உப்பை பயன்படுத்தலாம்.
* பஞ்சு போன்ற இட்லிக்கு சிலர் போஹா அல்லது சபுதானாவையும் சேர்க்கிறார்கள், இது விரைவான நொதித்தலுக்கு உதவுகிறது.
* நீங்கள் விரும்பும் இட்லி உயர்ந்து தட்டையாக இருக்க வேண்டாம் என்றால், மாவு கலவையை அரைக்கும்போது தண்ணீரின் அளவு குறித்து கவனம் செலுத்துங்கள்.
* இட்லி செய்ய துவங்கும் முன்னர் இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். இது வேகவைத்த இட்லிகள் சுத்தமாக இருக்க உதவுகிறது.
*இட்லி நன்றாக வேக வைத்த பின்னர், கூர்மையான கரண்டியைக் கொண்டு, சிறிது குளிர்ந்தவுடன் எடுக்கலாம்.
பின்குறிப்பு: நீங்கள் இந்த மாவில் தோசை செய்ய விரும்பினால், மாவு சிறிது புளித்தவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தோசை சுடலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil