Healthy food Tamil News: பாரம்பரியமிக்க சமையல் உணவுகளை விரும்பி சாப்பிட்ட நாம், தற்போது மாடன் உணவுகளுக்கு அடிமையாகி விட்டோம். இந்த மாடன் உணவுகளை உண்பதால் புதிய புதிய தொற்று நோய்கள் உருவாகின்றன. அதற்கு மருத்துவம் பார்க்க நாம் சேர்த்த வைத்த பணத்தை விரயம் செய்கின்றோம். மாடன் உணவுகளை விரும்பி சாப்பிடுகிறவர்களுக்கு மத்தியில் சிலர், பாரம்பரியமிக்க உணவுகளை கைவிடாமல் முன்னோர் வழி நடக்கிறார்கள்.
நம்முடைய பாரம்பரியமிக்க உணவுகளில் சாதத்திற்கு தனி மரியாதையை உண்டு. அந்த குழையாத சாதத்தோடு சுவையான சைடிஷ்களை சேர்த்து ருசித்தால், நாம் கொண்ட பசியெல்லாம் தீர்ந்து விடும். சாதம் சமைக்கும் பாதி நபர்கள், சாதம் குழைந்து விடும் எனக் கருதி குக்கரில் சாதம் வடிக்கின்றனர். குக்கரில் சாதம் வடிப்பதால், சாதத்தில் இருந்து கிடைக்கும் நீராகாரம் அல்லது வடிநீர் நமக்கு கிடைப்பதில்லை. இந்த வடிநீரை முந்திய நாள் எஞ்சிய சாதத்தில் சிறிதளவு தண்ணீரோடு சேர்த்து மிக்ஸ் செய்து வைத்து, மறுநாள் பழைய சாதமாக சாப்பிட்டால், உங்கள் பசியும் தீரும், உடலுக்கு வலுவும் கிடைக்கும்.
இந்த வடிநீரில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் முக்கியமாக நகரத்தில் வசிக்கும் மக்கள். மேலும் குக்கரில் செய்யும் சாதம் பலருக்கும் தீமையை தான் தருவதாக கூறப்படுகிறது.
இது போன்று உணவுகளால் பல தீமைகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது பலரும் தங்களது உணவு பழக்க வழக்கங்களை மாற்றி வருகின்றனர். மேலும் அவர்கள் வடி சாதத்தையே அதிகமாக பரிந்துரை செய்கின்றனர்.
இப்போது சுவையான வடி சாதம் எப்படி சமைப்பது என்பது குறித்து இங்கு காணலாம்.
வடி சாதம் சமையலுக்கு தண்ணீர் அளவு மிக முக்கியமான ஒன்றாகும். ஆகவே ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானது. அரிசி பெரியதாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் வைக்கலாம். மற்றும் மட்டை அல்லது சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த தண்ணீர் அளவை சரியாக பின்பற்றினால் சாதம் வடிக்கப்படும் போது நன்றாக இருக்கும்.
சாதம் வடிக்க தண்ணீருக்கு பிறகு, முக்கியமான ஒன்று அடுப்பின் தீ அளவு. சதாம் கொதி நிலைக்கு வரும் வரை அதிக தீ இருக்கலாம்.
அதன்பிறகு மிதமான தீ வைக்க வேண்டும். தீ மிக அதிகமாக இருந்தால், சாதம் குழைந்து விட வாய்ப்புள்ளது. எனவே அடுப்பின் தீயில் அதிக கவனம் தேவை.
நாம் எவ்வளவு தான் கவனம் செலுத்தினாலும், சில நேரங்களில் சாதம் குழைந்து விடும். ஒரு வேளை சாதம் குழைந்து விட்டது என நீங்கள் உணர்ந்தால், சாதத்தை வடிக்க அதிக நேரம் செலவிடக்கூடாது. சாதத்தில் உள்ள தண்ணீர் வடிந்த சில நிமிடங்களிலேயே பாத்திரத்தை நிமிர்த்த வேண்டும். பின்னர் ஒரு பெரிய வட்ட வடிவ பாத்திரத்தில் சாதத்தை கொட்டி ஆற விடவும். பின்னர் சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு கிளறவும். கரண்டியைக் கொண்டு கிளற வேண்டாம். இதனை நீங்கள் செய்தாலே போதும், சூப்பரான வடி சாதம் தயாராகிவிடும்!!!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )