Healthy food tamil news: நாம் சில நேரங்களில், நீண்ட நேரம் வேலை செய்தபின் சமையல் செய்வது கடினமான ஒன்றாக இருக்கும். அப்படியே சதாம் தயார் செய்திருந்தாலும், அதற்கேற்ப சைடிஷ் செய்ய குழப்பமாக இருக்கும். அந்த சமயங்களில் எளிமையானதாகவும், விரைவில் தயாராக கூடியதாகவும் உள்ள ரெசிபியை நோக்கி நகர்வோம். அப்படி சீக்கிரமாக தயார் செய்ய கூடிய ரெசிபி தான் தென்னிந்தியாவின் புகழ் பெற்ற ரசம்.
ரசம் தயாரிப்பதற்கான செய்முறை புதியதல்ல என்றாலும், பலர் ரசம் பொடியைச் சேர்க்கிறார்கள், அல்லது டி.ஐ.வி ரசம் தூள் தயாரிக்கிறார்கள். எனவே தான் உங்கள் சமையலறையில் உள்ள 5 அடிப்படை பொருட்களுடன் ரசம் தயாரிக்கும் எளிய முறையை இங்கு வழங்கியுள்ளோம்
தேவையான பொருட்கள்
1 - தக்காளி, தோராயமாக நறுக்கப்பட்டது
1/4 கப் - வேக வைத்த துவரம் பருப்பு,
1 எலுமிச்சை - 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் நனைக்கப்பட்டது
1 1/4 தேக்கரண்டி - சாம்பார் தூள்
1தேக்கரண்டி - கல் உப்பு / உப்பு
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து நடுத்தர தணலில் சூடேற்ற வேண்டும். பின்னர் அதில் எலுமிச்சை தண்ணீரை சேர்க்கவும். அதன் பிறகு நறுக்கிய தக்காளி, வேகவைத்து பிசைந்த துவரம்பருப்பு, சாம்பார் பவுடர் மற்றும் கல் உப்பு சேர்க்கவும். பின்னர் சுமார் 15 நிமிடங்கள் அவற்றை கொதிக்க விடவும். நீங்கள் விரும்பினால் அதில் சிறிதளவு கொத்தமல்லி சேர்க்கலாம். இப்போது நீங்கள் விரும்பிய ரசம் உங்களுக்கு கிடைக்கும். அதை நீங்கள் வடித்த சாதத்துடன் பரிமாறி ருசிக்கலாம்.
செய்முறை எப்படி- விளக்கம்?
இந்த செய்முறையில் நாம் சேர்க்கும் சாம்பார் தூள் அனைத்து மசாலாப் பொருட்களின் சரியான கலவையாகும். எலுமிச்சை அல்லது புளி அதன் தென்னக ரசத்திற்கான சுவையை சேர்க்கிறது. இவை இரண்டும் தக்காளியின் சாறுகளுடன் நன்றாக இணைத்து சுவையான கலவையை உருவாக்குகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil