கருப்பு உளுந்து, கருப்பட்டி… உடலுக்கு வலு சேர்க்க இதைவிட சிறந்த உணவு எது?

kali recipe black gram karuppu ulundhu kali with jaggery Tamil News: மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படும் உளுத்தங்களியில் கருப்பட்டி சேர்த்து சுவையான களி செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.

Healthy food Tamil News: kali recipe black gram karuppu ulundhu kali with jaggery

Healthy food Tamil News: தொன்மை வாய்ந்த நமது உணவு கலாச்சாரத்தில் களி முக்கிய இடத்தை பெறுகிறது. களி சாப்பிடும் பழக்கம் நகரங்களில் முற்றிலும் மறைந்தாலும், கிராம வாசிகள் அதை உயிர்ப்புடன் வைத்துள்ளார்கள். இந்த களிகளில் கேப்பைக் களி, உளுத்தங்களி, வெந்தயக் களி என்று 3 வகை உண்டு. இதில் நாம் பார்க்கவுள்ள உளுத்தங்களியில், கார்ப்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. 

உளுத்தங்களியை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் முக்கியமாக பூப்பெய்தும் பெண்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண் குழந்தைகள் போன்றோருக்கு மிகவும் ஏற்றது. இவை முதுகு வலியை நீங்குவதோடு, எலும்புகளுக்கு வலு தருகின்றது. 

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படும் உளுத்தங்களியில் கருப்பட்டி சேர்த்து சுவையான களி செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம். 

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – ஒரு கப்,

கருப்பட்டித்தூள் – ஒரு கப்,

தேங்காய்த் துருவல் – கால் கப்,

நல்லெண்ணெய் – கால் கப்,

ஏலக்காய்த்தூள் – சிட்டிகை.

நீங்கள் செய்ய வேண்டியவை 

முதலில் ஒரு அகலமான பாத்திரம் ஒன்று எடுத்துக்கொள்ள வேண்டும். அது மண் பாத்திரமாக இருந்தால் மிகவும் நல்லது. பின்னர் உடைத்த அல்லது உடைக்காத  கருப்பு உளுந்து ஒரு கப் எடுத்து கொள்ளவும். அதை அந்த பாத்திரத்தில் இட்டு நன்றாக வறுக்கவும். அதில் ஏலக்காயை சேர்த்து வறுக்கவும். அதை இப்போது மிக்சியில் வைத்து தூளாக அரைக்கவும்.  ஒரு வேளை உங்களிடம் ஏலக்காய்த்தூள் இருந்தால், வறுத்த உளுந்தை மிக்சியில் அரைத்த பிறகு அதில் சேர்த்துக்கொள்ளவும். 

இப்போது அரைத்து வைத்துள்ள உளுந்து மற்றும் ஏலக்காய்த்தூளை, ஒரு சிறிய பாத்திரதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கூழ் போன்று கிளறி வைத்துக்கொள்ளவும். பிறகு தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து தீ மூட்டவும். பின்னர் கூழ் போன்று கிளறி வைத்துள்ள உளுந்தங்  கலவையை அந்த பாத்திரத்தில் இட்டு, தொடர்ந்து கிளவிறவும். அவ்வப்போது நல்லெண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்துக்கொள்ளவும். பிறகு அவற்றோடு  கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கிளறவும். சிறிது நிமிடங்கள் கழித்து தேங்காய் துருவல்  போட்டு கிளறவும். தொடர்ந்து கிளறி நன்றாக சுண்டிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும். பிறகு லட்டு போன்று உருண்டையாக பிடித்து அவற்றை கஞ்சி தண்ணீரோடு சேர்த்து பரிமாறவும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy food tamil news kali recipe black gram karuppu ulundhu kali with jaggery

Next Story
தயிர், வெல்லம்… தினமும் இப்படி சாப்பிட்டுப் பாருங்க; அவ்ளோ பலன் இருக்கு!Healthy food Tamil News: Benefits Of Curd and Jaggery in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com