Healthy food Tamil News: உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களில் சின்ன வெங்காயமும் ஒன்று. மேலும் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்ட ஒரு மருந்து பொருளகவும் சின்ன வெங்காயம் உள்ளது.
சின்ன வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும். ஏனென்றால் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிரம்பி காணப்படுகின்றன. இதய நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் பற்பல நன்மைகளை உள்ளடக்கிய சின்ன வெங்காயத்தில் சப்பாத்தி செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் - கோதுமை மாவு
2 கப் - நறுக்கிய சிறிய வெங்காயம்
3 - பச்சை மிளகாய்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் சின்ன வெங்காயத்தை எடுத்து அதன் தோல்களை நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் பச்சை மிளகாயையும் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இப்போது கோதுமை மாவை எடுத்து அவற்றுடன் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், போன்றவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மாவை பிசையவும். பிறகு அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
மாவு நன்கு ஊறிய பிறகு சப்பாத்தி உருட்ட சிறு சிறு பிடிக்கவும். அதன் பிறகு அவற்றை சப்பாத்திகளாக உருட்டி தயார் செய்யவும். இப்போது அடுப்பை தீ மூட்டி அதன் மீது தோசைக்கல் வைக்கவும். கல் சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை ஒன்றன் பின் ஒன்றாக வேகவைத்து எடுக்கவும்.
இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சின்ன வெங்காய சப்பாத்தி தயாராக இருக்கும். இவற்றை எந்த சைடிஷ்வும் இல்லாமல் சும்மாவே உண்ணலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)