Healthy foods In Tamil, Immunity Booster With Badam, Ginger, Citrus: மழைக்காலம், குளிர்காலம், வெயில்காலம், என மூன்று காலநிலைகள் கொண்ட இந்தியாவில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. வெயில் காலம் முடிந்துவிட்டது என்று மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் குளிர்காலம் அதிக நோய் பரவும் அபாயம் உள்ளது.
Immunity Booster With Badam, Ginger, Citrus: பாதாம், இஞ்சி, சிட்ரஸ்
இந்த நேரத்தில், நம் உடலுக்கு சத்தான உணவுகள் தேவை. அந்த உணவில் இருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, நம்மை பருவகால நோய்களிலிருந்து பாதுகாக்கும். எனவே, இந்த குளிர்காலத்தில் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நம் உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய மூன்று உணவுகள் இங்கே பார்க்கலாம்.
பாதாம் பருப்பு:
பாதாம் பருப்ப்பில், மெக்னீசியம், புரதம், ரைபோஃப்ளேவின், துத்தநாகம் போன்ற 15 ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை தவிர, இதில் வைட்டமின் ஈ அதிகமாகவும் உள்ளன. இது நுரையீரல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்து வைட்டமின் ஈ நமக்கு பாதுகாப்பை வழங்குகிறது. பாதாம் எந்த நேரத்திலும் சாப்பிடக்கூடிய பொருளாக உள்ளது. ஒருவரின் உணவில் வெவ்வேறு வழிகளில் பாதாம் சேர்க்கப்டுகிறது. ஆரோக்கியமான மற்றும் சுவையான தின்பண்டங்களை உருவாக்க பாதாம் பருப்பை அதிகமாக பயன்படுத்தலாம்.
இஞ்சி :
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முதன்மை பொருட்களில் இஞ்சியும் ஒன்று. பாக்டீரியா மற்றும் வைரஸ்களைத் தடுக்க உதவும் சக்தி இஞ்சியில் உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தேநீர் அல்லது ஒரு மருத்துவ இஞ்சி கலவையை உட்கொள்வது பல நோய்களை தடுத்து நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
சிட்ரஸ்
வைட்டமின் சி சிட்ரஸ் பழம் நமது உடலில் நீண்டகாலம் நோயெதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும் பண்பு கொண்டது. மேலும் ஜலதோஷத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. ஒரு சிட்ரஸ் பழத்தில், ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி மற்றும் கொய்யா உள்ளிட்ட வைட்டமின் சி அதிகமாக பழங்களின் திறன் உள்ளது. பெரும்பாலான சிட்ரஸ் குளிர்ந்த மாதங்களில் அறுவடை செய்யப்படுவதால், தற்போது இந்த பழத்தின் வண்ணமயமான சுவையை அனுபவிக்க சரியான நேரம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"