Healthy Foods In Tamil, sesame benefits: எள்ளு முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில் அதிகம் விளைகிற பொருளாக இருந்தது. அதனால் அன்றாடம் நம் உணவில் இடம் பெற்றது. இப்போது நம்மைச் சுற்றி அதிகம் விளையவில்லை என்றாலும், மார்க்கெட்டில் தட்டுப்பாடு இல்லை. அதன் பயன்பாடு குறைந்துவிட்டதும்கூட இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் எள் மூலமாக கிடைக்கும் பலன்களை முழுமையாக அறிந்தால், அதை தவிர்க்க மாட்டீர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி போன்றவை உள்ளன. இதை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் பலன் முழுமையாக கிடைக்கும்.
sesame benefits: கருப்பு எள் நன்மைகள்
கருப்பு எள், புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும்; மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் என ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம், 'சீசமின்' என்ற மூலக்கூறு தான். இது, எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள் ஆகும். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த வேதி பொருள், எதிர்ப்பு சக்தியை துாண்டி, நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
ஒரு மாதம் சைட்- டிஷ் கவலையே இல்லை: டேஸ்டியான எள்ளுப் பொடி
பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் எள் தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி, சுத்தமாக வைக்கவும் உதவுகிறது. வெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளன. எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகளை தீர்க்கும்.
செரிமான பிரச்னை இருப்பவர்கள் தினமும் அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது. உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக, அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும். ஏற்கனவே நோய் உள்ளோர், மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.
சமையலை எளிதாக்கும் எள் சட்னி பொடி
நல்லெண்ணையில், 'சீசேமோலின்' எனும் வேதிப் பொருள் அதிகம் இருக்கிறது. எனவே, இதை உணவில் அதிகம் சேர்க்கும்போது, இதயத்திற்கு பாதுகாப்பு அளித்து இதய நோய் வராமல் தடுக்கிறது. நல்லெண்ணையில், துத்தநாகம் எனும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் சத்தை சேர்க்கும்.
நல்லெண்ணையில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க, பெரிதும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
கருப்பு எள்… முருங்கை இலை… பேரிச்சை..! இரும்புச் சத்து கிடைக்க எப்படி சாப்பிடணும் தெரியுமா?
எள் மூலமாக எள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி ஆகியவற்றை தயாரித்து பயன்படுத்தலாம். எளிய சிறுதானியமான எள்ளை இப்படி முழுமையாகப் பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"