Healthy Keto Diet : How to make cheese chips at home : உடல் எடை குறைப்பிற்கு மிக எளிமையான டயட்டாக கீட்டோ டயட் இருக்கிறது. இதை பின்பற்றுகிறவர்களின் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்க முடியும். மேலும் உடல் குறைய வேணும் என்றால், கார்போஹட்ரேட் குறைவான மற்றும் கொழுப்பு சத்தும் புரதம் அதிகமான உணவுகளை தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும்.
Healthy Keto Diet : How to make cheese chips at home
பட்டர் மற்றும் சீஸ் ஆகிய இரண்டுமே கீட்டோ உணவுகள் தான். இவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபிகளை சாப்பிடும்போது உடல் எடை குறையும்.
சீஸ் சிப்ஸ் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.
கோட் சீஸில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம். கோட் சீஸில் புரதம், காப்பர், கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. உடலுக்கு நல்ல கொலஸ்ட்ராலை கொடுத்து ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.
தேவையான பொருட்கள்:
கோட் சீஸ் - தேவையான அளவு
செடர் சீஸ் - 50 கிராம்
செய்முறை:
கோட் சீஸை மெல்லிசான துண்டுகளாக வெட்டி அதனை தவாவில் வைத்து பொரிக்கவும். 2--3 நிமிடங்களுக்கு பிறகு அதனை திருப்பி போட்டு மீண்டும் சிறிது நேரம் பொரித்து எடுக்கவும்.
ஒரு தட்டில் செடர் சீஸை துருவி எடுத்து வைத்து கொள்ளவும். அதில் ஆனியன் பொடி சேர்த்து கலந்து ஃப்ரையின் பேனில் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு மொருமொருப்பாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.
கோட் சீஸ் சிப்ஸ் மற்றும் செடர் சீஸ் சிப்ஸ் ஆகிய இரண்டு கீட்டோ உணவுகளை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம். இதனால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதுடன் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க : Hair Growth: பச்சைக் கீரை, பழக் கூழ், கேரட்… கூந்தல் வளர்ச்சிக்கு எளிய உணவுகள்