Kollu Rasam Easy Recipe Tamil News: பீட்ஸா, பர்கர் எனக் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு உடலில் அதிகப்படியான கொழுப்புகளைச் சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் கொள்ளு பருப்பு கைகொடுக்கும். அதிலும் இந்த கொள்ளு ரசம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குளிர் காலத்தில் சூடான சூப்பாகவும் செய்து பருகும் அதன் செய்முறையை இனி பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கொள்ளு பருப்பு – 1/4 கப்
புளி – நெல்லியளவு
தக்காளி – 2
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 6
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
நெய் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள், கடுகு – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கல் எதுவும் இல்லாமல் கொள்ளு பருப்பைச் சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஊற வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை குக்கரில் நன்கு வேக வைத்து எடுத்து, ஆறியதும் அதனை மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
அடுத்து தக்காளி, கொத்தமல்லியைக் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து ஒன்றாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளியை சேர்த்துக் கொதிக்க விடவும். அதனோடு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இதனை சூப்பாகவும் குடிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Healthy kollu rasam easy recipe milagu rasam recipe tamil
சாரதா அம்மா கேரக்டரில் அந்த நடிகை கிடையாதாம்: தெளிவு படுத்திய ராதிகா
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்ட ராமதாஸ் எப்படி 10.5% ஒப்புக்கொண்டார்? – திருமாவளவன் கேள்வி
ராகுல் காந்தி, அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரம் : முழு விவரம் உள்ளே
அனைத்து துறைகளிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு: சென்னை பல்கலைக்கழகம் முடிவு
தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் – மான் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி உரை