பச்சை பயிறு குருமா சூப்பரா செய்யலாம். ரொம்பவும் ஹெல்தியான குருமா இது. ஈசியாக செய்யலாம்.
செய்முறை
1 கப் பச்சை பயிறு
3 ½ கப் தண்ணீர்
3 பல் பூண்டு
5 சின்ன வெங்காயம்
1 ஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் கருவேப்பிலை
1 கப் துருவிய தேங்காய்
அரை ஸ்பூன் மஞ்சள் பொடி
4 பச்சை மிளகாய்
உப்பு
எண்ணெய் 3 ஸ்பூன்
கடுகு
வர மிளகாய் 2
சின்ன வெங்காயம் நறுக்கியது 6
செய்முறை: பச்சை பயிறை நன்றாக கழுவ வேண்டும். அதில் 3 அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், கருவேப்பிலை, சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும். குக்கரை தொடர்ந்து, அரைத்த விழுதை சேர்க்கவும். இது நன்றாக கொதிக்க வைக்கவும். எண்ணெய்யில், கடுகு சேர்த்து, வர மிளாய், சின்ன வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும். இதை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். சூப்பரான குருமா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“