Advertisment

புரசத்சத்து இருக்கு.. அவல், கடலை வைத்து சுவையான ஸ்நாக்ஸ்; குழந்தைகளுக்குப் பிடிக்கும்

அவல், கடலை வைத்து சுவையான லட்டு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது குறித்துப் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
saae
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அவல், கடலை வைத்து சுவையான லட்டு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது குறித்துப் பார்ப்போம். 

Advertisment

வெள்ளை அவல் – ½ கப் 

பொட்டுக்கடலை – ¼ கப் 

தேங்காய்த் துருவல் – ½ கப் 

வேர்க்கடலை – ¼ கப் 

வெள்ளை எள் – 2 டேபிள் ஸ்பூன் 

துருவிய வெல்லம் – 1½ கப் 

நெய் 2 டேபிள் ஸ்பூன் 

பாதாம், முந்திரி – தலா 1 டீஸ்பூன்

செய்முறை 

முதலில் கடாயில் அவல், பொட்டுக் கடலை, எள், தேங்காய்த் துருவல் சேர்த்து தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா பொருட்களும் வறுத்து ஆறியதும் வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி அதையும் அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது வறுத்த அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடிகனமான பாத்திரம் எடுத்து வெல்லத்தை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி, 

பாகு பதம் வந்ததும் இறக்கி அதனை அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்த்து கலக்கவும். கடைசியாக நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியையும் சேர்த்து மிதமான சூட்டில் அப்படியோ லட்டு பிடிக்கவும். அவ்வளளவு தான் சுவையான, சத்தான ஸ்நாக்ஸ் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment