Advertisment

செலவே இல்லாத டாப் 5 உணவுகள்: நோய்களுக்கு டாட்டா!

Immunity boost foods : பருவ மழை காலத்தில் வழக்கமாக பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமானது. ஆலிவ் எண்ணெயில் அடங்கியுள்ள ஏராளமான anti-oxidants காரணமாக புற்று நோய், வகை -2 நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய் வருவதற்கான அபாயங்களை இது குறைக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
healthy life, diet, monsoon, immunity, immunity boost food, foods, food items, health , coronavirus , monsoon, immunity boost food news, immunity boost food news in tamil, immunity boost food latest news, immunity boost food latest news in tamil

healthy life, diet, monsoon, immunity, immunity boost food, foods, food items, health , coronavirus , monsoon, immunity boost food news, immunity boost food news in tamil, immunity boost food latest news, immunity boost food latest news in tamil

Healthy Foods: இந்த வருட பருவ மழை காலம் தொடங்கிவிட்டது. இந்த சூழலில் நமது உணவில் சில மாற்றங்களை செய்துக் கொண்டால் நமது ஆரோக்கியம் தொடர்பான தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

பருவ மழை காலங்களில் பருவ கால நோய்களான ஒவ்வாமை, நோய்தொற்று மற்றும் flu போன்றவை நம்மை தாக்க வாய்ப்புள்ளது.

உட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பது, தேவையான உடற்பயிற்சி செய்வது, யோகா மற்றும் மூச்சு பயிற்சி செய்வது, ஆழ்ந்த உறக்கம் போன்ற சீரான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது தான் இதற்கான தீர்வு. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான 5 சிறந்த ஆரோக்கியமான உணவுகள் இங்கே.

க்ரீன் டீ (Green tea)

எல்லா இந்தியர்களும் மழை காலத்தில் சூடான தேனீர் குடிக்க விருப்பப்படுவார்கள். இந்த காலத்தில் வழக்கமாக குடிக்கும் தேனீருக்கு பதிலாக நறுமணமுள்ள கிரீன் டீ குடிப்பது சிறந்தது. க்ரீன் டீயில் இயற்கையான antioxidants உள்ளது. கிரீன் டீயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. மேலும் இது நமது உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

தேன்

பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஒரு இயற்கையான தீர்வு தேன். தொண்டையில் ஏற்படும் புண், கபம் மற்றும் இதனால் ஏற்படும் காய்ச்சல் இவற்றுக்கு தேன் சிறந்த நிவாரணி. தேனுடன் சிறிது இஞ்சி சேர்த்து சாப்பிடுவது தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும். தேன் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தும் கூட.

வேப்பிலை

வேப்பிலை அனைத்து மருத்துவ தாவரங்களிலும் சிறந்தது. மேலும் இது அனைத்து விதமான நோய்களையும் விரட்ட வல்லது. குடற்புழு தொந்தரவுக்கான சிறந்த தீர்வு வேப்பிலை. இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வெளிப்புற நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வேப்பிலை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செரிமானத்துக்கும் நல்லது.

கற்றாழை

ஒட்டுமொத்த உடல் பராமரிப்புக்கும் கற்றாழை சிறந்தது. 20 க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் இதில் அடங்கியுள்ளது. இது முடி மற்றும் சரும மேம்பாட்டுக்கு சிறந்தது. மலச்சிக்கல் மற்றும் acidity ஆகியவற்றுக்கு கற்றாழை நல்லது மேலும் இது உடலின் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

Olive எண்ணெய்

பருவ மழை காலத்தில் வழக்கமாக பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமானது. ஆலிவ் எண்ணெயில் அடங்கியுள்ள ஏராளமான anti-oxidants காரணமாக புற்று நோய், வகை -2 நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய் வருவதற்கான அபாயங்களை இது குறைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment