நீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்!

ஆப்பிளில் உள்ள, ஆன்டி-ஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, செரிமான மண்டலத்தை வளப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆப்பிளில் உள்ள, ஆன்டி-ஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, செரிமான மண்டலத்தை வளப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fruits for diabetes

fruits for diabetes

Diabetes: இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும் போது, சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றையும் பாதிக்கும். எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், அசாதாரணமாக இருந்துவிடாமல், உணவில் சற்று கட்டுப்பட்டுடன் இருப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் என்று உள்ளன.

அவற்றில் அவர்கள் சாப்பிடக்கூடிய பழங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பீச்சஸ்

Advertisment

பீச் பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தை தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

பேரிக்காய்

சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை

சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும்

நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்

அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக

இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு

நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில்

உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, செரிமான மண்டலத்தை வளப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

செர்ரி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி

செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை

சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

Lifestyle Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: