மிளகு, சீரகம், சுக்கு… சுவையான காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?

Kancheepuram idli receipe in Tamil : மிளகு, சீரகம், சுக்குனு சுவையான காஞ்சிபுரம் இட்லி செய்முறையை உங்களுக்காக தொகுத்து வழங்குறோம். ஜஸ்ட் ஒன் டைம் ட்ரை பண்ணிப் பாருங்க!

காஞ்சிபுரம் பட்டுக்கு அடுத்ததாக நமக்கு நினைவுக்கு வருவது, ‘காஞ்சிபுரம் இட்லி’. ‘சும்மாவே நான் செய்யுற இட்லி, கல்லு மாதிரி இருக்கு. இதெல்லாம் யார் சாப்பிடுவாங்கனு வீட்டுல வாங்குற திட்டு எனக்குத் தானே தெரியும்’னு, உங்களோட மைண்ட் வாய்ஸ நாங்க கேட்ஷ் பண்ணிட்டோம். இருந்தாலும், மிளகு, சீரகம், சுக்குனு சுவையான காஞ்சிபுரம் இட்லி செய்முறையை உங்களுக்காக தொகுத்து வழங்குறோம். ஜஸ்ட் ஒன் டைம் ட்ரை பண்ணிப் பாருங்க! கண்டிப்பா உங்க வீட்டோட ஃபேவரட் டிஷ் ஆகிரும்.

இதோ, காஞ்சிபுரம் இட்லிக்கான செய்முறை :

தேவையான அளவு இட்லி அரிசியையும், உளுந்தையும் குறைந்தது நான்கு மணிநேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த அரிசியை இட்லி மாவு பதத்தில் மிருதுவாக அரைத்தப் உப்பு சேர்க்கவும். பின், அரைத்த மாவை, இரவு முழுவதும் நன்றாக புளிக்க விடுங்கள்.

இரவு முழுவதும் மாவு நன்றாக புளித்திருக்கும். இப்போது, ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி மற்றும் சுக்குப் பொடியை நன்றாக வறுக்கவும். முந்திரி பொன்நிறமாகும் வரை வறுத்தால், அதுதான் சரியான பதம். இவற்றை இட்லி மாவில் கொட்டிவிடவும்.

பின், பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு ஆகியவற்றை முழுதாகவும், சம அளவில் இரண்டையும் பொடியாக்கி தாலித்து, பின் அதையும் மாவில் சேர்க்கவும். பின், அதே பாத்திரத்தில் பெருங்காயம் மற்றும் தேங்காய் சில்லுகளை வறுத்தும் சேர்க்கவும்.

இட்லி பானை அல்லது இட்லி குக்கரில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். பின், சம அளவிலான டம்ளர்களை எடுத்து, அதில் முக்கால் பாகத்துக்கு இட்லி மாவை ஊற்றி 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்றாக வேக விடவும்.

நீங்கள் காத்துக் கொண்டிருந்த, காஞ்சிபுரம் இட்லி தயார்!

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy life kancheepuram famous idli receipe tamil

Next Story
ஜீரண சக்தி, எடை குறைப்பு… கருப்பு மிளகில் இவ்வளவு நன்மை இருக்கு!Benefits of Black pepper Tamil News: King of spices,enemy of ailments the Black pepper
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express