நல்ல துாக்கம் வேண்டும் என்றால் சில உணவுகள், குடிபானங்களை தவிர்ப்பது நல்லது. அதிலும் சோடா, குளிர்பானங்களை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
இரவு தூங்கப்போகும் முன் காபி, டீ போன்றவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும், இதுபோன்ற பானங்களில் கஃபைன் அதிகமாக இருக்கிறது. கஃபைன் நிறைந்த பானங்களை நீங்கள் தவிர்த்து விட்டால் தினமும் ஆழந்த உறக்கத்தை பெறலாம். இரவு நேரத்தில் காபி, டீ, சாக்லேட் மில்க்ஷேக், சோடா, குளிர் பானங்கள், மதுபானம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மேலும் கஃபைன் நிறைந்த உணவுகள் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதனால் தூக்கம் தடைப்படும். இதன் காரணமாக இதயம் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கும். இரவு தூங்கப்போகும் முன் பால் குடிப்பதே சிறந்தது. பாலில் ட்ரிப்டோஃபான் இருப்பதால் மூளை செயல்பாட்டை ஆற்றுப்படுத்தி நல்ல தூக்கத்தை உண்டாக்குகிறது.