இந்தியாவில் மட்டும் 20 வயதிலிருந்து 40 வயது வயதில் கூட மாரடைப்பால் இருக்கிறார்கள் என்று டாக்டர் சொக்கலிங்கம் எஸ் எஸ் மியூசிக் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
20 வயது ஆனதும் எல்லோரும் கட்டாயமாக ஒரு ஐந்து பரிசோதனைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
- பிளட் பிரஷர்(பிபி சோதனை)
- பிளட் சுகர்
- கொலஸ்ட்ரால்
- ஈசிஜி
- எக்ஸ்ரே
ஆகிய 5 சோதனைகளையும் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொக்கலிங்கம் கூறுகிறார்.
இவற்றில் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ உதவிகள் பெறலாம். ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை இந்த ஐந்து டெஸ்ட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேல் ஒவ்வொரு வருடமும் இந்த ஐந்து டெஸ்டையும் எடுத்துக் கொள்வது நல்லது என்றும் அவர் கூறுகிறார்.
இது மாதிரியான பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு அவர் முக்கியமான மூன்று ‘உ’ பற்றி கூறுகிறார். அவை உணவு, உளவு, உடற்பயிற்சி ஆகும். அதாவது சாப்பிடுகிற உணவும் சீராகவும் எண்ணுகிற எண்ணம் நல்லதாகவும் ஆரோக்கியமான உடற்பயிற்சியும் இருந்தால் இந்த பிரச்சனைகள் வராது என்று கூறுகிறார்.
பசிக்கு சாப்பிட்டு விடலாம் ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கூட மாரடைப்புக்கு காரணம் என்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.