Healthy Millet Dosa Recipe Tamil News : அதிகப்படியான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மீண்டும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை. வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகள் இனி குறையும். இதுபோன்ற சூழ்நிலையில் ஆரோக்கியமான சத்தான உணவுகள்தான் கைகொடுக்கும். அந்த வரிசையில், இந்த சிறு தினை தோசை நிச்சயம் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். தோசையில் வித்தியாசம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் சேர்த்துக் கொடுக்கும் அதன் செய்முறையைப் பார்க்கலாமா!
Advertisment
தேவையான பொருட்கள்:
சிறிய தினை - 1 கப் முழு பச்சை பயிறு - ½ கப் இஞ்சி - 1 இன்ச் வெந்தயம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சிறு தினை மற்றும் பச்சை பயிரை 6-8 மணி நேரம் நன்கு கழுவி ஊற வைக்கவும்.
அதன் கூடவே வெந்தயம் விதைகளை ஊற வைக்கவும்.
பிறகுத் தினை, பருப்பு, வெந்தயம் மற்றும் இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதனை 7-8 மணி நேரம் புளிக்க அனுமதிக்கவும்.
மாவு புளித்ததும் உப்பு சேர்க்கவும்.
தோசை மாவு ரெடி. இந்த மாவில், அனைத்து வகையான காய்கறிகளையும் பயன்படுத்தி காய்கறி தோசை தயார் செய்து மேலும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil