காலை உணவு இன்றியமையாதது மற்றும் அன்றைய உணவுகளில் மிக முக்கியமான உணவு என்று மீண்டும் மீண்டும் கேள்விப்படுகிறோம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் காலையில் அவசரமாக ஆரோக்கியமான உணவைச் செய்ய எந்த நேரமும் இல்லாமல் காலை உணவாக Barsஐ எடுத்துக் கொள்கிறோம்.
அதுவும் குழந்தைகளுக்கு காலை உணவாக Barsஐ அவர்களுக்கு தருவது நல்லது அல்ல. மேலும் அனைத்து காலை உணவுத் தானியங்களும் கூடுதல் சர்க்கரையுடன் வருகின்றன. எனவே நீண்ட இரவு தூக்கத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கு ஒரு நல்ல காலை உணவு தேவை. குறிப்பாக அவர்களின் சிறிய உடல்கள் நாள் முழுவதும் செயல்படுவதற்கு நல்ல காலை உணவு அவசியம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். கொரோனா காலங்களில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் விளையாட்டு குறைவு என்பதால் காலை உணவுக்கு ஏதேனும் ஒன்றை கொடுப்பது நல்லதல்ல.
எனவே, ஆரோக்கியமான சத்தான மற்றும் 10 நிமிடங்களுக்குள் செய்யக்கூடிய 5 சமையல் குறிப்புகளை தற்போது பார்ப்போம். இதை சாம்பியன்களின் காலை உணவு என்று அழைக்கலாம். இதைச் செய்து உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
ஓட்ஸ் பான்கேக்ஸ்
தேவையான பொருட்கள்
1 கப் ஓட்ஸ்
1 டீஸ்பூன் ரவை
2 டீஸ்பூன் யோகர்ட்
துண்டுகளாக்கப்பட்ட காய்கறிகள் (பீன்ஸ்,கேரட்,வெங்காயம்)
உப்பு மற்றும் தண்ணீர் தேவைக்கேற்ப
அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்கவும். அந்த மாவை ஒரு சிறிய வாணலியில் சிறிதுசிறிதாக ஊற்றி இருபுறமும் நன்றாக வேகும் வரை சமைக்கவும்.
வாழைப்பழ பான்கேக்ஸ்
தேவையான பொருட்கள்
2 வாழைப்பழங்கள்
½ கப் கோதுமை மாவு
2 டீஸ்பூன் வெல்லம் (சர்க்கரை/ சர்க்கரையுடன் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம்)
தண்ணீர் தேவையான அளவு
ஒரு மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அனைத்துப் பொருட்களையும் நன்கு அரைக்கவும். தண்ணியாக இல்லாமல் கடாயில் ஊற்றக் கூடிய அளவில் கெட்டியாக அரைக்க வேண்டும்.
ஒரு கடாயை சூடாக்கி வெண்ணெயை அதில் உருக்கவும், மாவை சிறிது சிறிதாக ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை நன்கு சமைக்கவும்.
வாழைப்பழங்கள் அதிகப்படியாக இருந்தால் சர்க்கரையை குறைவாக சேர்த்து கொள்வது நல்லது.
முட்டை மஃபின்கள்
தேவையான பொருட்கள்
2 முட்டை
2 டீஸ்பூன் பால்
½ தேக்கரண்டி சமையல் சோடா
2 டீஸ்பூன் சீஸ்
தேவைக்கேறப உப்பு
விரும்பினால் இறுதியாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை நன்றாக கலக்கவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சில வண்ணமயமான லைனர்களுடன் ஒரு மஃபின் பானில் பாதி வரை ஊற்றுங்கள். 200 டிகிரி செல்சியஸில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்துக்கொள்ளுங்கள்.
வண்ணமயமான பின்வீல் சாண்ட்விச்கள்
தேவையான பொருட்கள்
4 ரொட்டி துண்டுகள்
2 டீஸ்பூன் மயோனைஸெ
4 டீஸ்பூன் அரைத்த கேரட்
1 டீஸ்பூன் (Spinach puree )கீரை கூழ் அல்லது (green chutney)பச்சை சட்னி
3 சீஸ் துண்டுகள்
ரொட்டியின் ஓரங்களை வெட்டி, உருட்டல் முள் பயன்படுத்தி தட்டையாக வைக்கவும் அடுத்து பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று இணையுமாறு ஒரு ரயில் போன்று துண்டுகளை ஒழுங்குபடுத்துங்கள்.
ஒரு கரண்டியின் பின்புறத்தை பயன்படுத்தி தட்டையாக்குங்கள். விளிம்புகளை மூடுவதற்கு சிறிது தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் பாதி மயோனைஸெயை அரைத்த கேரட்டுடன் கலக்கவும். ஒரு தனி கிண்ணத்தில் மீதமுள்ள மயோனைஸெயை கீரைகூழ் அல்லது பச்சை சட்னியுடன் கலக்கவும். கேரட் கலவையை ரொட்டி துண்டுகளில் பரப்பவும். சீஸ் துண்டுகளால் அடுக்கவும். இதன் மீது சட்னி அல்லது கீரை கூழ் மற்றும் மயோனைஸெ பரப்பவும்.
ஒரு விளிம்பிலிருந்து தொடங்கி ரொட்டியை உருட்டவும். முழுமையாக உருட்டிய பிறகு சிறிய வட்டுகளாக வெட்டவும். இந்த சாண்ட்விச் ஆரோக்கியமானது.
ரெட் வெல்வெட் பான்கேக்ஸ்
தேவையான பொருட்கள்
2 நடுத்தர அளவிலான பீட்ரூட்களின் சாறு (வேகவைத்த அல்லது பச்சையாக)
1 கப் கோதுமை மாவு
1 தேக்கரண்டி சமையல் சோடா
2 டீஸ்பூன் சர்க்கரை அல்லது தேன்
¼ கப் பால்
ஒரு பெரிய கிண்ணத்தில் உலர்ந்த பொருட்களை சேர்க்கவும்
அடுத்து பால் மற்றும் சர்க்கரை அல்லது தேன் சேர்க்கவும்
நன்றாக கலக்கி கொள்ளுங்கள்
பீட்ரூட் சாறு சேர்த்து அடர்த்தியை சரிசெய்யவும். தண்ணீராக அல்லாமல் கெட்டியாக நன்கு கலக்கவும்.
ஒரு கடாயில் சிறிது வெண்ணெயை உருக்கி பான்கேக்கை தயாரிக்கவும்.
சிறிது தேன் சேர்த்து பரிமாறவும்.
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரைப் பின்பற்றுவார்கள். எனவே சிறிது நேரம் ஒதுக்கி சிறியவர்களுடன் காலை உணவை உட்கொள்வது நல்லது. இது நல்ல ஊட்டச்சத்து தவிர குழந்தைகளுடன் நீங்கள் இருப்பதை உறுதி செய்யும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.