மாலை நேர ஸ்நான்க்ஸ் ரெசிபிகளில் கட்லெட்டுக்கு தனி இடம் உண்டு. பலருக்கு கட்டெலட் ஒரு பிடித்தமான டிஷ். சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் என பல வகை உள்ளது. தற்போது ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம். பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட குறிப்பாக குழந்தைகள் இதை கட்லெடாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1
முந்திரி பருப்பு, திராட்சை - தேவைகேற்ப
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1/2 ஸ்பூன்
சாட் மசாலா தூள்-1 ஸ்பூன்
வேகவைத்த உருளைக்கிழங்கு -1
வேகவைத்த பச்சை பட்டாணி - 1/2 கப்
நறுக்கிய கொத்தமல்லி இலை
மைதா அல்லது சோள மாவு - 2 ஸ்பூன்
தண்ணீர்
பிரட் தூள்
எண்ணெய்
பீட்ரூட் கட்லெட் செய்முறை
முதலில் பீட்ரூட்டை தோலுரித்து செதுக்கி எடுத்து வைக்கவும்.
கடாய் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுக்கவும்.
பின்பு அதில் நீளமாக வெட்டிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதனோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அதில் பீட்ரூட் சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும் அதில் உப்பு, சீரகத்தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.
பின்பு உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.
தற்போது அடுப்பை ஆஃப் செய்து விட்டு கிழங்கை மசிக்க வேண்டும்.
பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் வேக வைத்த பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
பின்பு கட்லெட் போல வட்டமாக தட்டி வைக்கவும்.
தனியாக ஒரு பவுலில் 2 ஸ்பூன் மைதா சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைக்கவும். ஒரு தட்டில் பிரெட் தூள்களை வைக்கவும்.
செய்து வைத்துள்ள கட்லெட் மாவை மைதா மாவு கலவையில் போட்டு பிரட்டி பின்பு பிரெட் தூளில் போட்டு பிரட்டி எடுக்கவும்.
அவற்றை 20 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
பின்பு அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். சூடானதும் இந்த கட்லெட்டை போட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை பிரட்டி எடுக்கவும்.
சூப்பர் சாப்ஃட் பீட்ரூட் கட்லெட் ரெடி..
இதற்கு கெட்ச்அப் அல்லது மயோனீஸ் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.