Advertisment

திடீர் கோபம் மாரடைப்பைத் தூண்டுமா? எச்சரிக்கும் இதய நோய் நிபுணர்

விரக்தியால் பொருட்களைத் தூக்கி எறியும் பழக்கம் உள்ளவர்களில் நீங்களும் ஒருவரா?

author-image
WebDesk
New Update
Heart

Can you have a heart attack after an angry outburst?

விரக்தியால் பொருட்களைத் தூக்கி எறியும் பழக்கம் உள்ளவர்களில் நீங்களும் ஒருவரா? இத்தகைய திடீர் ஆத்திரம் மாரடைப்பைத் தூண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஒன்றுக்கு மேற்பட்ட ஆய்வுகள், மாரடைப்பு மற்றும் திடீர் கோபம் நிகழ்வுகளுக்கு இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்துள்ளன. தீவிர உணர்ச்சிகள் 2 மணி நேரத்திற்குள் இதய நாளங்களை சுருக்கி ரத்த ஓட்டத்தை பாதிக்கின்றன. 

அதிக தீவிரமான அல்லது அடிக்கடி கோபம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரின் இதய ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்து விளைவிக்கும். 

கோபம் என்பது மன அழுத்தத்தின் வெளிப்பாடாகும், இது மன அழுத்தம் காரணமாக அதிகம் உண்ணும் பழக்கம் அல்லது தூக்கத்தில் தொந்தரவு போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு வழிவகுக்கும், இது உங்கள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

மாரடைப்பு அபாயத்தை ஆத்திரம் எப்படி அதிகரிக்கிறது? 

கோபமானது அட்ரினலின், எபிநெஃப்ரின் மற்றும் கார்டிசோல் போன்ற சில அழுத்த ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது.

இவை முதலில் இதயத் துடிப்பையும் பின்னர் ரத்த அழுத்தத்தையும் (BP) அதிகரிக்கின்றன. இது தலைவலி, வியர்வை, இதயத் துடிப்பு, மார்பில் வலி மற்றும் கவலைக்கு வழிவகுக்கும். இப்போது அடிப்படை தமனிகள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அல்லது தமனிகள் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்தால், மேலே கூறப்பட்ட நிலைமைகளின் காரணமாக இதயத்தில் ஏற்படும் மன அழுத்தம் பிளேக்கை உடைத்து, சிதைந்து, ரத்தம் உறைந்து, ரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம்.

அதிகப்படியான அட்ரினலின் இதயத்திற்கு ரத்தத்தை வழங்கும் சிறிய தமனிகளின் சுருக்கத்தை ஏற்படுத்தும், இதனால் ரத்த ஓட்டத்தில் தற்காலிக குறைவு ஏற்படுகிறது. 

சில நேரங்களில், அதிகப்படியான அட்ரினலின் இதய உயிரணுக்களுடன் நேரடியாக பிணைக்கப்படலாம், இதனால் அதிகளவு கால்சியம் செல்களுக்குள் நுழைகிறது. இது இதயத்தின் வழக்கமான துடிப்புடன் குறுக்கிடுகிறது மற்றும் இதய தசைகளை பலவீனப்படுத்தலாம். இதைத்தான் ஸ்ட்ரெஸ் கார்டியோமயோபதி (stress cardiomyopathy) என்கிறோம். 

யாருக்கு கோப மேலாண்மை தேவை? 

Advertisment

Heart attack in young adult

கொமொர்பிடிட்டிகளுடன் (அதிக ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோய்) வாழ்பவர்களுக்கு கோப மேலாண்மை அவசியம். குறிப்பாக ஏற்கனவே இதய நோய் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களில்.. 

யோகா, தியானம் செய்ய நான் பரிந்துரைக்கிறேன், இவை இரண்டும் உங்கள் மனதையும், இயல்பான நடத்தையையும் அமைதிப்படுத்த உதவும்.

ஆத்திரத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்வது சிறந்த வழி. பத்தில் இருந்து ஒன்று வரை எண்ணலாம், உங்களை நீங்களே அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிராணயாமாவைப் போன்ற ஆழமான சுவாச நுட்பங்கள் உடனடியாக உங்களை ஆசுவாசப்படுத்தி, உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கும். 

மேலும், தீடீர் கோபத்துக்கு ஆளானால், மாரடைப்புக்கான மற்ற அனைத்து ஆபத்து காரணிகளையும் கட்டுப்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 

சில ஆராய்ச்சியாளர்கள், அடிக்கடி கோபம் வரும் ஆரோக்கியமானவர்கள், அமைதியானவர்களை விட 19 சதவீதம் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களில், பொதுவாக கோபமாகவோ அல்லது விரோதமாகவோ உணருபவர்கள் மற்றவர்களை விட மோசமாக உள்ளனர். 

உங்கள் கோபத்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

நீங்கள் உங்களுக்கே தீங்கு செய்யலாம். உங்கள் மூர்க்கத்தனம் முதலில் அதை ஏற்படுத்திய சிக்கலை தீர்க்காது, ஆனால் மற்றவர்களிடமிருந்து அதிக ஆத்திரமூட்டும் நடத்தையைத் தூண்டும். உங்கள் உணர்வுகள் கட்டுப்பாடற்றதாக இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவதை கவனியுங்கள். 

Read in English: Can you have a heart attack after an angry outburst? Find out how extreme emotions impact your body

(Dr Chandra is Principal Director, Interventional Cardiology, Fortis Escorts Heart Institute, Delhi)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment