Heart Attack Symptoms: ப்ளீஸ்! உங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு இந்த 10 அறிகுறிகள் இருந்தா உடனே மருத்துவரை பாருங்க!

அனைத்து இதயப் பிரச்சனைகளும் தெளிவான அறிகுறிகளுடன் இருப்பதில்லை என்றாலும், சில பொதுவான அறிகுறிகளை தெரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம்!

உங்கள் இதயத்தை கவனித்துக்கொள்வது முக்கியம், ஏனெனில் இது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தை செலுத்துவதன் மூலம், இதயம்தான் நம்மை வாழ வைக்கிறது. இதயம் தனது வேலையைச் செய்வதை நிறுத்தினால், முழு அமைப்பும் தோல்வியடையும். அதனால்தான் உடல்-உறுப்புகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க, வழக்கமான மருத்துவ-சோதனைகளை மேற்கொள்வது முக்கியம்.

இதய பிரச்சனைகள் வரும்போது எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. எனவேதான், சில பொதுவான அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம். அதன்மூலம், சிறிதளவு மாற்றம் அல்லது அசாதாரணத்தைக் கண்டறிந்து, நிலைமை மோசமடைவதைத் தடுத்து, சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கமுடியும்.

ஆரோக்கியமற்ற இதயத்துக்கான 10 அறிகுறிகள் இதோ!

மார்பு அசௌகரியம்

இது உங்கள் இதயம் ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் பொதுவான அறிகுறிகளில் இதுவும் ஒன்று. உங்களுக்கு தமனி (இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்குக் ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் ஒன்று) அடைபட்டிருக்கும் போது மார்பில் இறுக்கம், வலி ​​அல்லது அழுத்தத்தை அனுபவிக்கலாம் அல்லது மாரடைப்பின் போது இது ஏற்படலாம். இந்த அறிகுறி நீங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போதோ அல்லது சில உடல் செயல்பாடுகளின் போது ஏற்படும், இது சில நிமிடங்களுக்கு நீடிக்கும், நீங்கள் வலி உணரும் இடத்தில் தொடும்போது அல்லது அழுத்தும்போதோ மேலும் வலி அதிகமாகும். சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக பெண்களுக்கு, மார்பு வலி இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம்.

குமட்டல், அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல்

மாரடைப்பின் போது சிலருக்கு குமட்டல், அஜீரணம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகளுடன் வாந்தியும் சேர்ந்து கொள்ளும். எனவே, பல சமயங்களில், மாரடைப்பு என்பது அஜீரணக் கோளாறு என்று தவறாகக் கருதப்படும். வயிற்றுப் பிரச்சினைகள் மற்ற காரணங்களால் ஏற்படலாம், ஆனால் அது மாரடைப்பையும் குறிக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 

வலியை வெளிப்படுத்தும்

இதய நோயின் மற்றொரு பொதுவான அறிகுறி, உடலின் இடது பக்கத்தில் கீழ்நோக்கி பரவும் வலி. இது பொதுவாக மார்பில் இருந்து உருவாகி கைகளை நோக்கி நகர்கிறது. கை வலி இதய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

மயக்கம், தலைசுற்றல், லேசான தலைவலி

மயக்கம் அல்லது தலைச்சுற்றல் பொதுவாக அனைவருக்கும் ஏற்படும். வெப்பம், மோசமான காற்றோட்டம், உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில் இருந்து மிக வேகமாக எழுந்திருத்தல், பதட்டம் அல்லது அதிர்ச்சி போன்ற காரணங்களால் நீங்கள் மயக்கம் அடையலாம். ஆனால் மார்பு அசௌகரியம் அல்லது மூச்சுத் திணறலுடன் இருக்கும் போது, இது இரத்த அழுத்தம் குறைதல் போன்ற மிகவும் தீவிரமான ஒன்றைக் குறிக்கும். இது இதயத்தின் உந்து திறனில், தடங்கலை ஏற்படுத்தும்.

தொண்டை அல்லது தாடையில் வலி

தொண்டை அல்லது தாடை வலி பொதுவாக தசை பிரச்சனை, சளி அல்லது சைனஸ் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இருப்பினும், மார்பில் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், அது தாடை அல்லது தொண்டை வரை பரவுகிறது, இது மாரடைப்பைக் குறிக்கும்.

சோர்வு

சோர்வு என்பது இதய பிரச்சனையின் மற்றொரு அறிகுறி. படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது மளிகைப் பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற சில செயல்களுக்குப் பிறகு உங்களுக்கு சோர்வு ஏற்பட்டால், அது சிக்கலைக் குறிக்கலாம்.  சில நாட்களில் சில சமயங்களில், தீவிர சோர்வு அல்லது விவரிக்க முடியாத பலவீனம், இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம், குறிப்பாக பெண்களுக்கு.

குறட்டை

தூங்கும் போது குறட்டை விடுவது சகஜம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சத்தமாக குறட்டை விடுவது அல்லது மூச்சுத்திணறல் ஆகியவை, தூக்கத்தில் மூச்சுத்திணறலின் அறிகுறியாக இருக்கும், இதனால் தூங்கும் போது சிறிது நேரம் சுவாசம் தடைபடும். இது உங்கள் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்கி இதய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

வியர்வை

குறிப்பிட்ட காரணமின்றி குளிர்ந்த வியர்வை வெளியேறுவது மாரடைப்பைக் குறிக்கும். மேற்கூறிய அறிகுறிகளுடன் இது நடந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்!

ஒழுங்கற்ற அல்லது அசாதாரண இதயத் துடிப்பு

பதட்டமாக அல்லது உற்சாகமாக இருக்கும் போது இதயம் வேகமாக துடிப்பதை உணர்வோம். ஆனால் இது ஒரு சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்தால், அது சிக்கலைக் குறிக்கும்.

நீண்ட காலத்திற்கு ஓரிரு துடிப்புகளைத் தவிர்த்தல்

நீண்ட காலம், அல்லது அடிக்கடி, ஓரிரு துடிப்புகளைத் தவிர்த்தல் ‘ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்’ (atrial fibrillation) எனும் நிலையைக் குறிக்கலாம். ( பொதுவாக மோசமான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் ஒழுங்கற்ற, விரைவான இதயத் துடிப்பு), இது இரத்த உறைவு, பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் இதயம் தொடர்பான சிக்கல்கள் போன்ற பிறவற்றிற்கு வழிவகுக்கும்.

உடல் உறுப்புகளின் வீக்கம்

கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம் உங்கள் இதயம் இரத்தத்தை திறம்பட செலுத்தவில்லை என்பதைக் குறிக்கலாம். இது நரம்புகளில் இரத்தம் மீண்டும் தேங்குவதற்கு வழிவகுத்து, வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதய செயலிழப்பு ஏற்பட்டால், அதிகப்படியான நீர் மற்றும் சோடியத்தை அகற்ற உங்கள் சிறுநீரகத்தின் வடிகட்டி திறன் பாதிக்கப்படலாம், இதன் விளைவாக வீக்கம் ஏற்படலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Heart attack signs and symptoms to know about

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com