Advertisment

சுகர், பி.பி. இல்லை: பிறகு ஏன் இந்த 42 வயது நபருக்கு மாரடைப்பு வந்தது? மருத்துவர் விளக்குகிறார்

உங்கள் தமனிகளில் 30 முதல் 40 சதவீதம் பிளேக் இருக்கலாம், இது வழக்கமான செயல்பாட்டின் போது அறிகுறிகளை காட்டாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lifestyle

No diabetes, BP: Why then did this 42-year-old get a heart attack with 100 per cent blockage

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் போன்ற அடிப்படை நிலைமைகள் இல்லாமல் கூட ஒருவருக்கு அமைதியான திடீர் மாரடைப்பு ஏற்படலாம். அப்படித்தான் குடும்ப நிகழ்ச்சிக்கு காரில் சென்ற டெல்லியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

Advertisment

அசௌகரியம் இருப்பதாக கூறிய உடனே அவர் மயங்கி விழுந்தார், மேலும் தமனிகளில் கிட்டத்தட்ட 100 சதவீதம் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் அவர் சிறிது நேரத்தில் காப்பாற்றப்பட்டார்.

அந்த நபர் முதலில் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் கார்டியோஜெனிக் ஷாக் சிகிச்சை தொடர்ந்து மயக்கம் அடைந்தார். பிறகு ஒரு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு அவரது இதயத்தின் செயல்பாட்டை புதுப்பிக்க மீண்டும் மீண்டும் CPR மற்றும் பல ஷாக் சிகிச்சைகள் வழங்கப்பட்டது, ஆனால் எதுவும் அவரது நிலையை மேம்படுத்த உதவவில்லை.

பின்னர் அவர் மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் அவசர அறைக்கு (ER) மாற்றப்பட்டார். ஆம்புலன்சில் கூட அவருக்கு தொடர்ந்து சிபிஆர் வழங்கப்பட்டது.

இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் இருதயவியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அமித் மிட்டல் கூறும்போது, ​​’அப்பல்லோவுக்கு மாற்றப்பட்டதும், அவர் கார்டியாக் கேத் லேப்க்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு உடனடியாக ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டது. இது இதயத்தின் முக்கிய தமனியில் (LAD) 99-100 சதவீதம் அடைப்பைக் காட்டியது. அடைபட்ட நாளத்தில், ஆஞ்சியோகிராபி மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி உடனடியாக செய்யப்பட்டது.

இந்த சிகிச்சைக்கு பிறகு, அவரது இதயத் துடிப்பு மற்றும் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டு இயல்பாக்கப்பட்டது. இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வென்டிலேட்டர் ஆதரவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது இதய செயல்பாடு 30 சதவீதமாக அதிகரித்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவரது இதய செயல்பாடு 60 சதவீதம் வரை சீரடைந்துள்ளது’ என்றார்.

publive-image

இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சையின் மூத்த ஆலோசகர் டாக்டர் முகேஷ் கோயல் மேலும் கூறுகையில், ’நோயாளியின் நிலை ஒவ்வொரு நிமிடமும் மோசமடைந்ததால் இது மிகவும் சிக்கலாக இருந்தது. அவர் மீண்டும் மீண்டும் மாரடைப்பு வரும் (ventricular fibrillation) நிலையில் இருந்தார் மற்றும் பல ஷாக் சிகிச்சைகள் மற்றும் CPR கொடுக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை சீராகவில்லை. அவர் அப்பல்லோவுக்கு மாற்றப்பட்டபோது, ​​நாங்கள் விரைவாகச் செயல்படுவது முக்கியம். ஆஞ்சியோபிளாஸ்டியின் போது கூட, நாங்கள் அவருக்கு தொடர்ந்து மசாஜ் செய்து, ஷாக் சிகிச்சை அளித்தோம்’ என்றார்.

இதுகுறித்து டாக்டர் கோயல் கூறுகையில், இது ஒரு இளைய நோயாளிக்கு அமைதியான மாரடைப்புக்கான பொதுவான நிகழ்வு. உங்கள் தமனிகளில் 30 முதல் 40 சதவீதம் பிளேக் இருக்கலாம், இது வழக்கமான செயல்பாட்டின் போது அறிகுறிகளை காட்டாது. உங்கள் கொலஸ்ட்ரால் அளவு சாதாரணமாக இருக்கலாம் அல்லது அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில தூண்டுதல்கள், உதாரணமாக அழுத்தம் போன்ற காரணத்தால், பிளேக் மேற்பரப்பில் விரிசல் ஏற்படலாம். இது ரத்தம் அதன் மேல் உறைவதற்கு காரணமாகிறது, மேலும் இந்த உறைவு சிறிது நேரத்தில் பெரிதாகி, தமனிகளுக்கு ரத்த விநியோகத்தை நிறுத்துகிறது, என்று அவர் விளக்குகிறார்.

நோயாளி இப்போது மருந்து, ரத்தத்தை மெலிக்கும் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்கிறார், இது அவரது இதயத்தின் ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது. அவர் இப்போது உணவு கட்டுப்பாடு மற்றும் நடைபயிற்சி உடன் தனது வாழ்க்கை முறையை மாற்றியமைத்து இருக்கிறார்.. மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் 30 முதல் 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டலாம் அல்லது 3 முதல் 4 கிமீ வரை விறுவிறுப்பான நடைபயிற்சி செய்யலாம், இது அவரது வாழ்நாள் முழுவதும் அவரை ஒரு தாளத்தில் வைத்திருக்கும் என்று டாக்டர் கோயல் கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment