Advertisment

கடுமையான மேல் முதுகு வலி: வரவிருக்கும் மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியா?

நெஞ்சு வலி என்பது பொதுவான அறிகுறியாக இருந்தாலும், ஒருவர் உடலில் எங்கும் வலியை அனுபவிக்கலாம்.

author-image
WebDesk
New Update
Heart attack

Is back pain a warning sign of cardiac arrest?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாரடைப்பு என்பது முக்கிய இதயத் தமனிகளில் ஒன்றில் அடைப்பு ஏற்படுவதைக் குறிக்கிறது. இது திடீர் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

Advertisment

மாரடைப்புக்கு முன்னதாக உடலில் ஏற்படும் எந்த எச்சரிக்கை அறிகுறிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து உடனடி மருத்துவ உதவியை நாடினால் உயிர்களைக் காப்பாற்ற முடியும், என்று டாக்டர் ருசித் ஷா, (Interventional Cardiologist, Masina Hospital, Mumbai) முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆனால் மாரடைப்புடன் தொடர்புடைய பொதுவான நெஞ்சு வலிகவலைப்பட வேண்டிய ஒரே அறிகுறியா?

மாரடைப்பு என்றால் என்ன?

இதய செயலிழப்பைத் தொடர்ந்து பொதுவாக மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு என்பது முக்கிய இதயத் தமனிகளில் ஒன்றில் அடைப்பு ஏற்படுவதைக் குறிக்கிறது. இது திடீர் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

நெஞ்சு வலி என்பது பொதுவான அறிகுறியாக இருந்தாலும் ஒருவர் உடலில் எங்கும் வலியை அனுபவிக்கலாம்.

இது முன் இடது அல்லது வலது தோள்பட்டை, இடது கை வலது கை, வயிற்றின் மேல் பகுதி, தாடை, கழுத்து, பின்புறம் இரண்டு தோள்பட்டைக்கு இடையில் அல்லது கன்னம் முதல் தொப்புள் வரை எங்கும் முன்புறம் அல்லது பின்பகுதியில் இருக்கலாம் என்று டாக்டர் ஷா கூறினார்.

பொதுவான அறிகுறிகள்       

Woman heart pain

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இதய பிரச்சினைகள் லேசான வலி அல்லது அசௌகரியத்துடன் தொடங்குகின்றன. மார்பு வலி என்பது மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால் ஒருவர் புறக்கணிக்கக் கூடாத பல எச்சரிக்கை அறிகுறிகளில் கடுமையான முதுகுவலியும் உள்ளது என்று டாக்டர் ஜாகியா கான் (Senior Consultant-Interventional Cardiology, Fortis Hospital, Kalyan) கூறினார்.

இருப்பினும் சில வகையான முதுகுவலி மட்டுமே மாரடைப்புக்கான குறிகாட்டிகளாகும் என்று பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்ட் சுதீப் கே என் கூறினார்.

தோள் பட்டையுடன் சேர்ந்து மேல் முதுகுவலி அல்லது புதிய முதுகுவலி ஆகியவை இதில் அடங்கும். 

கூடுதலாக வியர்வை, சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய முதுகு வலியானது மாரடைப்பின் அசாதாரண அறிகுறிகளாகும். இது சிகிச்சையளிக்கா விட்டால் மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் சுதீப் குறிப்பிட்டார்.

டாக்டர் கானின் கூற்றுப்படி கடுமையான மேல் முதுகு வலி மார்பு அல்லது கைக்கு பரவுவது வரவிருக்கும் மாரடைப்புக்கான சரியான அறிகுறியாக இருக்கலாம்.

ஆச்சரியமாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மாரடைப்புக்கு முன்னும் பின்னும் ஏற்படும் முதுகுவலியைப் புகாரளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது.

அறிகுறிகள் ஏற்பட்டால் என்ன செய்வது?

ஒரு நபர் மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவித்தால் ஒரு சுகாதார நிலையத்தை அணுகி ECG, ECHO, TMT போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் கான் கூறினார்.

வழக்கமான உடல் பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்த சோதனைகள் உள்ளிட்ட பிற தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் இதய பிரச்சினைகளைத் தடுக்கவும், எளிதில் தடுக்கக்கூடிய ஆபத்து காரணிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவும் உதவும் என்று டாக்டர் சுதீப் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment