Advertisment

Heart Failure: இதய செயலிழப்பு பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு விஷயங்கள்!

ஜாக்கிரதை! நீண்ட காலமாக கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு விளைவாக இதய செயலிழப்பு ஏற்படலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
heart-attack-cardiac-arrest-

heart failure Everyone should know about this eight important things

கடந்த சில மாதங்களில், பலர் தங்கள் இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மாரடைப்பு நிகழ்வுகளின் அதிகரிப்புக்கு மத்தியில், இதயத்தை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் அதை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக அறிந்து கொள்வது அவசியம்.

Advertisment

மருத்துவர் கணேஷ் நல்லூர் ஷிவு, மூத்த இருதயநோய் நிபுணர், இதய ஆரோக்கியத்தின் எட்டு முக்கிய அம்சங்களையும், மக்கள் முற்றிலும் தெரிந்து கொள்ள வேண்டியவற்றையும் எடுத்துரைக்கிறார். படிக்கவும்.

1. இதய செயலிழப்பு என்றால் என்ன?

மூளை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் உட்பட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தை பம்ப் செய்வதுதான்’ இதயத்தின் வேலை. இந்த உறுப்புகளுக்கு போதுமான இரத்த விநியோகத்தை இதயம் வழங்கத் தவறினால், அது இதய செயலிழப்பு எனப்படும் என்று மருத்துவர் கூறுகிறார்.

2. அறிகுறிகள் என்ன?

நடைபயிற்சி அல்லது பிற செயல்பாடுகளின் போது மூச்சு விடுவதில் சிரமம், கால்கள் அல்லது அடிவயிற்றில் வீக்கம், சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாமை ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.

3. இதய செயலிழப்பு யாருக்கு ஏற்படலாம்?

மருத்துவர் கூற்றுப்படி, மாரடைப்பு, ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை போன்ற ஏற்கெனவே பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளுக்கு பொதுவாக இதய செயலிழப்பு ஏற்படுகிறது. நீண்ட காலமாக கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு விளைவாக இதய செயலிழப்பு ஏற்படலாம்.

"வைரஸ் நோயைத் தொடர்ந்து இளம் நோயாளிகளுக்கும் இதய செயலிழப்பு ஏற்படலாம், இது வைரஸ் மயோர்கார்டிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.

4. நோயறிதலுக்கான பொதுவான சோதனைகள் என்ன?

மருத்துவர் பொதுவாக ECG, எக்கோ கார்டியோகிராம் மற்றும் இரத்த பரிசோதனைகளை மேற்கொள்கிறார். எக்கோ கார்டியோகிராம் என்பது இதயத்தின் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை ஆகும், இது அதன் செயல்பாட்டு திறன் மற்றும் இதயத்தில் உள்ள பல்வேறு வால்வுகளின் செயல்பாட்டை தீர்மானிக்க உதவுகிறது.

இரத்த சோகை, சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு மற்றும் தைராய்டு பிரச்சினைகள் போன்ற இதய செயலிழப்புக்கான பிற காரணங்களை கண்டறிய இரத்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதய செயலிழப்பு கண்டறியப்பட்ட பிறகு, தமனிகளில் அடைப்பு இருப்பதைக் கண்டறிய கரோனரி ஆஞ்சியோகிராம் செய்வதை மருத்துவர் பரிசீலிக்கலாம்.

5. என்ன சிகிச்சை?

மருத்துவர் அதிகப்படியான திரவத்தை (diuretics or water tablets) அகற்ற மருந்துகள் மற்றும் இதய செயல்பாட்டை மீட்டெடுக்க உதவும் பிற மருந்துகளை (ACE inhibitors, AT2 antagonists and beta blockers) பரிந்துரைப்பார்.

6. மற்ற சிகிச்சை?

இதய செயலிழப்புக்கான காரணத்திற்கான சிகிச்சையை மருத்துவர் பரிசீலிக்கலாம். இதில் கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி, கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃபிட்டிங் மற்றும் வால்வு மாற்றுதல் ஆகியவை அடங்கும். நோயாளிகளின் அறிகுறிகளையும், முன்கணிப்பையும் மேம்படுத்தும் சிறப்பு வகை பேஸ்மேக்கர்ஸ் சிகிச்சையும்( pacemakers) உள்ளது. தீவிர நிகழ்வுகளில், இடது வென்ட்ரிகுலர் உதவி சாதனங்கள் (left ventricular assist devices )மற்றும் இதய மாற்று சிகிச்சை ஆகியவை பரிசீலிக்கப்படும்.

7. நோயாளிகள் தங்களுக்கு உதவ என்ன செய்ய வேண்டும்?

நோயாளி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

தினசரி உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைத்தபடி அவர்கள் தினசரி உட்கொள்ளும் திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அவர்களின் இதயச் செயல்பாட்டில் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் தொடர்ந்து தங்கள் மருத்துவரைப் பின்தொடர வேண்டும்.

அறிகுறிகள் மோசமடைந்தால் அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.

8. முன்கணிப்பு என்ன?

"இதய செயலிழப்புக்கான முன்கணிப்பு சில புற்றுநோய்களை விட மோசமாக இருக்கும். எனவே, நோயாளிகள் உடனடி சிகிச்சை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்து, அவர்களின் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி, நோயாளிகள் உடல்நலத்தை கண்காணிப்பது மிகவும் முக்கியம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment