குளிர்காலத்தில் இதயப் பிரச்சினைகள் மிகவும் பொதுவானதாகி விடுகின்றன, எனவே ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலும் வெளிப்படையான அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, வானிலை தொடர்பான மாரடைப்புக்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, நமது உடலின் உடலியல் மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி இதயத்தை பாதிக்கும் விதம். உடலின் உயிரியல் நிலை சிம்பெதெட்டிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துவதன் மூலம் தடைபடுகிறது, இது நம் உடலில் உள்ள ரத்த நாளங்களை சுருக்குகிறது. இது ‘வாசோகன்ஸ்டிரிக்ஷன்’ எனப்படும். இந்தச் செயல்பாட்டின் போது, உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்ய இதயத்தை அழுத்துவதால், ரத்த அழுத்த அளவு அதிகரிக்கிறது, என்று புதுதில்லி டாக்டர் பல்பீர் சிங் தெரிவித்தார்.
ஆனால் ஆயுர்வேத டாக்டர் மிஹிர் காத்ரி, சில ஆயுர்வேத வைத்தியம் மூலம் இதுபோன்ற நிகழ்வுகளின் அபாயங்களைக் குறைக்கலாம் என்கிறார். பழைய வெல்லம் (கருப்பு நிறமாக இருக்கும்) மற்றும் இரண்டு பல் பூண்டு, எவ்வாறு இதயக் கோளாறுகளைத் தடுக்கும் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.
இதயக் கோளாறுகளுக்கு சிறந்த ஆயுர்வேத உதவிக்குறிப்பு அல்லது இதயக் கோளாறுகளைத் தடுப்பதற்கு இரண்டு பல் பூண்டு மற்றும் பழைய வெல்லம் சேர்த்து சட்னி செய்வது. இதை காலை உணவு அல்லது மதிய உணவுடன் சாப்பிடுங்கள்.
இது வாயு தொடர்பான கோளாறுகளுக்கு உதவுகிறது, வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது, இரத்தத்தை நீர்த்துப்போகச் செய்கிறது, கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கிறது, இது குளிர்காலம் தொடர்பான இதய பிரச்சினைகளைத் தவிர்க்கிறது, என்று காத்ரி பகிர்ந்து கொண்டார். எவ்வாறாயினும், இந்த கலவையானது இயற்கையில் வெப்பத்தை உருவாக்கும் என்பதால், கோடையில் இதை ஒருவர் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிடாமல் இருப்பவர்கள் அல்லது நீரிழிவு நோயாளிகள், அரை ஸ்பூன் ஆளிவிதை (வறுக்காதது), அல்லது உலர்ந்த இஞ்சி மற்றும் கருப்பு மிளகு (2 கிராம்), அல்லது கருப்பு எள் விதைகளை (ஒரு ஸ்பூன்) மென்று சாப்பிடலாம் என்றும் அவர் தலைப்பில் பகிர்ந்துள்ளார்.
ஆனால், இது உண்மையில் செயல்படுகின்றனவா?
ஆயுர்வேத டாக்டர் டிக்சா பவ்சர் சவாலியாவின் கூற்றுப்படி, பூண்டு மற்றும் வெல்லம் ஒரு சக்திவாய்ந்த கலவையாகும். பூண்டு, உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலின் அடைப்புகளுக்கு சிறந்தது.
இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், மூட்டு வலியைக் குறைக்கவும், கிரிமி நீக்கவும், கொழுப்பை மேம்படுத்தவும், இருமல் மற்றும் சளியை விரட்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரையை சமன் செய்யவும், எடை குறைக்கவும் உதவுகிறது, என்றார்.
ஆயுர்வேத தயாரிப்புகளில் வெல்லம் ஒரு பொதுவான மூலப்பொருள் என்பதை வலியுறுத்திய, ஆயுர்வேத டாக்டர் சுதா அசோகன், வெல்லத்தில் துத்தநாகம் மற்றும் செலினியம் நிறைந்துள்ளது, மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலுக்கு நச்சு நீக்கும் முகவராகவும், ரத்த சுத்திகரிப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெல்லம் ஜீரண சக்தியை அதிகரிக்கவும், சுவாச பிரச்சனைகளில் இருந்து மீளவும் உதவுகிறது. இது உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது, இது மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணம் அளிக்கும்.
எனவே, உணவுக்கு முன் இரண்டையும் ஒரு ஸ்பூன் அளவு உட்கொள்வது ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது, அதே நேரத்தில் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது என்று ஆயுர்வேத நிபுணர் விகாஸ் சாவ்லா கூறினார்.

எந்த ஒரு இனிப்பும் உடல் எடையை அதிகரிக்கச் செய்து கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும் என்றாலும், வெல்லம் உங்களை திருப்தியடையச் செய்து இனிப்பு பசியிலிருந்து விலக்கி வைக்கிறது என்று டாக்டர் டிக்சா சுட்டிக்காட்டினார். எனவே, ஒரு டீஸ்பூன் வெல்லம் சர்க்கரை நோயாளிகள் அல்லாதவர்களுக்கும் உதவுகிறது, என்று டிக்சா மேலும் கூறினார்.
இருப்பினும், கருப்பு எள் “ஒருவரின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்” என அவர் அறிவுறுத்தினார்.
நீரிழிவு நோயாளிகளுக்கு, சாவ்லா ஆளிவிதைகளை பரிந்துரைத்தார், அவை “ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன, மேலும் நல்ல இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது உட்பட பல வழிகளில் உடலுக்கு உதவுகிறது.”
கருப்பு எள் விதைகளில் எளிதில் கிடைக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற மேக்ரோ-மினரல்களை அதிக அளவில் உட்கொள்வது, இதய நோய்க்கான ஆபத்து காரணிகளை குறைக்கிறது, குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், என்று அவர் மேலும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“