மூத்த நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான சதீஷ் கௌசிக் குருகிராமில் மாரடைப்பால் காலமானார் என்று அவரது நெருங்கிய நண்பரும் சக நடிகருமான அனுபம் கெர் உறுதிப்படுத்தினார்.
Advertisment
பாலிவுட் நடிகர் அனுபம் கெர், தனது அஞ்சலியில். ‘இந்த உலகின் இறுதி உண்மை மரணம் என்பது எனக்குத் தெரியும்!" ஆனால் உயிருடன் இருக்கும் போது எனது சிறந்த நண்பன் # சதீஷ் கௌஷிக் பற்றி இப்படி எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 45 வருட நட்புக்கு இப்படி ஒரு திடீர் முற்றுப்புள்ளி!! நீங்கள் இல்லாமல் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது சதீஷ்! ஓம் சாந்தி!’ என்று உணர்ச்சிப்பொங்க எழுதியிருந்தார்.
जानता हूँ “मृत्यु ही इस दुनिया का अंतिम सच है!” पर ये बात मैं जीते जी कभी अपने जिगरी दोस्त #SatishKaushik के बारे में लिखूँगा, ये मैंने सपने में भी नहीं सोचा था।45 साल की दोस्ती पर ऐसे अचानक पूर्णविराम !! Life will NEVER be the same without you SATISH ! ओम् शांति! 💔💔💔 pic.twitter.com/WC5Yutwvqc
கௌசிக் குருகிராமில் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்தது, காரில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, என்று அனுபர் கெர் இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார்.
66 வயதாகும் கௌசிக், மார்ச் 7 அன்று ஹோலி விருந்தில் கலந்து கொண்டார். அப்போது எடுத்த அழகான படங்களை தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதய தசையின் ஒரு பகுதிக்கு போதுமான ரத்தம் கிடைக்காதபோது மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க சிகிச்சையின்றி அதிக நேரம் கடக்கும்போது, இதய தசைகளுக்கு அதிக சேதம் ஏற்படும் என்று டாக்டர் ஷ்ரே ஸ்ரீவஸ்தவ் கூறினார்.
நீங்கள் 60 வயதுக்கு மேல் இருந்தால் உங்களுக்கான மாரடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள்
நெஞ்சு வலி அல்லது அசௌகரியம்:
பெரும்பாலான மாரடைப்புகளில் மார்பின் மையத்திலோ அல்லது இடது பக்கத்திலோ ஏற்படும் அசௌகரியம் சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் அல்லது அது போய்விட்டு மீண்டும் வரும். அசௌகரியமான அழுத்தம், பிழிவது போன்ற உணர்வு, கனமான அல்லது வலி போன்ற அசௌகரியத்தை உணரலாம், என்று டாக்டர் ஸ்ரீவஸ்தவ் கூறினார்.
லேசான மார்பு அசௌகரியம் அல்லது எரிச்சல் உணர்வு பெரும்பாலும் "வாயு' என்று நிராகரிக்கப்படுகிறது, என்று டாக்டர் சுபேந்து மொஹந்தி குறிப்பிட்டார்.
தோள்பட்டை அல்லது கைகளில் ஏற்படும் வலி பொதுவாக கை வலி என்று நிராகரிக்கப்படுகிறது. நடக்கும்போது அல்லது ஏதேனும் மன அழுத்தத்தின் போது மார்பில் ஏதேனும் கனம் அல்லது வலி இருந்தால் கண்காணிக்கப்பட வேண்டும், என்றார்.
* பலவீனம், லேசான தலைசுற்றல் அல்லது மயக்கம். குளிர்ந்த வியர்வை வெளியேறலாம்.
* தாடை, கழுத்து அல்லது முதுகில், மேல் வயிற்றில் வலி அல்லது அசௌகரியம்.
* ஒன்று அல்லது இரண்டு கைகள் அல்லது தோள்களில் வலி அல்லது அசௌகரியம்.
* மூச்சு திணறல். இது அடிக்கடி மார்பு அசௌகரியத்துடன் வருகிறது, ஆனால் மார்பு அசௌகரியத்திற்கு முன் மூச்சுத் திணறலும் ஏற்படலாம்.
*அதிக வியர்வை.
உடல் பருமனாக இருப்பவர்கள் மற்றும் ஏற்கனவே இருக்கும் இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்வாய்ப்பட்ட நிலைமைகளைக் கொண்டவர்கள், புகைபிடித்தல், மது அருந்துதல், உட்கார்ந்த வாழ்க்கை முறை அல்லது போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற ஆபத்து காரணிகளுடன் வாழ்பவர்கள் மேலே குறிப்பிட்ட எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும், என்று டாக்டர் ஸ்ரீவஸ்தவ் கூறினார்.
எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.
இருதயநோய் நிபுணர் பங்கஜ் ரமேஷ் பத்ரா கூறுகையில், திடீரென நெஞ்சு கனம், அதிக வியர்வையுடன் மூச்சுத் திணறல் போன்ற திடீர் அறிகுறிகளை யாராவது கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஈசிஜி எடுக்க வேண்டும் என்றார்.
தடுப்பு
* புகைபிடிக்க வேண்டாம்.
* உங்கள் ரத்த அழுத்தத்தை 120/80 mm Hg கீழே வைத்திருங்கள்.
* உங்கள் கொலஸ்ட்ராலைச் சரிபார்த்து, உங்கள் எண்களைப் பற்றி உங்கள் சுகாதார நிபுணரிடம் பேசுங்கள்.
* நிறைவுற்ற கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு, உப்பு மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் குறைவாக உள்ள உணவுகளை உண்ணுங்கள்.
* உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள். ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான தீவிர உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.
* ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும். ஒரு சாதாரண பி.எம்.ஐ. அளவு 18.5–24.9 இடையே உள்ளது.
* நீங்கள் உண்ணாமல் இருக்கும் போது ரத்த சர்க்கரையை 100 mg/dL க்கும் குறைவாகவும் அல்லது A1C 5.7% க்கும் குறைவாகவும் வைத்திருங்கள்.
* போதுமான அளவு உறங்கவும். ஒரு நாளைக்கு சராசரியாக 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்.
* வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
* பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“