/indian-express-tamil/media/media_files/2025/05/01/3VmNwejbiHYx0xQ2iqPa.jpg)
Summer skin problems natural remedies
கோடைக்காலம் வந்துவிட்டாலே பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான சருமப் பிரச்சனை வேர்க்குரு. உடலில் அதிகப்படியான வியர்வை மற்றும் வெப்பத்தின் காரணமாக தோலில் சிறு சிறு சிவப்பு நிறப் புள்ளிகளாக இது தோன்றும். அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும் இந்த வேர்க்குருவை சில எளிய இயற்கை வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம்.
இதோ உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள்:
தயிர் மற்றும் மஞ்சள் தூள்
திக்கான ஒரு தேக்கரண்டி தயிரில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு சரும வறட்சியை குறைக்கிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் பி5 சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்றுக்களால் ஏற்படும் அரிப்பை குறைக்கிறது.
சந்தனப் பொடி மற்றும் ரோஸ் வாட்டர்
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சியைத் தருவதோடு, அரிப்பையும் குறைக்க உதவுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்தை மென்மையாக்குகிறது.
உணவிலும் கவனம் அவசியம்
உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்யவும், உடல் வெப்பத்தை குறைக்கவும் உங்கள் தினசரி உணவில் பின்வரும் உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்:
இளநீர்
மோர்
தர்பூசணி
முலாம்பழம்
வெள்ளரிக்காய்
குப்பைமேனி கீரை
மதிய உணவில் பருப்புடன் குப்பைமேனி கீரையை சமைத்து சாப்பிடுவது உடல் வெப்பத்தை குறைக்க உதவும். குப்பைமேனி கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அற்புத மூலிகையாகும்.
இந்த எளிமையான இயற்கை வைத்திய முறைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் வேர்க்குருவின் தொல்லையிலிருந்து நிச்சயமாக விடுபடலாம். இருப்பினும், உங்களுக்கு இருக்கும் பிரச்சனை மிகவும் தீவிரமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் சரியான தீர்வாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.