குளிக்கிற தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு… கொளுத்தும் வெயிலை சமாளிக்க இதை ஃபாலோ பண்ணுங்க; டாக்டர் பொற்கொடி
இந்தியா முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி விட்டது. வெயிலை சமாளிக்க என்ன செய்வது என மக்கள் தேட துவங்கி விட்டனர். கோடை வெயிலின் சூட்டை தணிக்க என்னென்ன முன்னெச்சரிக்கை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் பொற்கொடி.
இந்தியா முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி விட்டது. வெயிலை சமாளிக்க என்ன செய்வது என மக்கள் தேட துவங்கி விட்டனர். கோடை வெயிலின் சூட்டை தணிக்க என்னென்ன முன்னெச்சரிக்கை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் பொற்கொடி.
கொளுத்தும் வெயிலை சமாளிக்க மருத்துவர் பொற்கொடி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பாகற்காய், சுண்டைக்காய், கோவக்காய், முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை இதில் ஏதேனும் ஒன்றை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். கோடை காலத்தில் எளிதாக கிடைக்கக்கூடிய தர்பூசணி, வெள்ளரிக் காய், இளநீர், சப்போட்டா, நொங்கு, பப்பாளி ஆகியவற்றை சாப்பிட வேண்டும். வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உடுத்தும் உடைகளில் கவனம் வேண்டும். இறுக ஆடை அணியாமல், காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்து குளிக்கலாம் (அ) வேப்பில்லை, மருதாணி கலந்த தண்ணீரில் குளிக்கலாம். கற்றாழை சாறு வடிகட்டி அதனுடன் எலுமிச்சை, சிறிதளவு பாதாம் பிசின் சேர்த்து தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனால், உடல் சூடு குறையும் என்கிறார் மருத்துவர் பொற்கொடி.
Advertisment
கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
எல்லா உணவுகளும் கோடைக்கு ஏற்றவை அல்ல. கோடை காலத்தில் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம். காபி, டீ மற்றும் கோலா போன்ற பானங்கள் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். காரமான மற்றும் வறுத்த உணவுகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும் செரிமானத்தை குறைக்கும். அதிக புரதம் நிறைந்த உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.
வெப்பநிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில விஷயங்களை செய்யலாம். இந்த கோடையில் நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.