New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/20/OY8ajvmI2QQlSlnqWyvH.jpg)
சபரிமலையில் திடீரென பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல்
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். விசேஷ நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும். இந்நிலையில், சபரிமலையில் திடீரென பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது . 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
52,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் விர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்திருப்பதால் தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. பொதுவாக ஐப்பசி மாதம் பிறப்பிற்கு அவ்வளவாக பக்தர்கள் வருவதில்லை.
சபரிமலையில் திடீரென குவித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்; 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்#Sabarimala pic.twitter.com/W0rVusq8uI
— Indian Express Tamil (@IeTamil) October 20, 2024
ஆனால் கடந்த ஆண்டிலிருந்து தான் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்து இருக்கிறது. அடுத்து வரும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் வருகை லட்சக்கணக்கில் இருக்கும் என்பதால் முன்கூட்டியே தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.