குதிகால் வலி என்பது இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. குறிப்பாக காலையில் தூங்கி எழுந்ததும், தரையில் காலை வைத்தவுடன் குதிகாலில் ஏற்படும் கடுமையான வலி, சில சமயங்களில் கெண்டைக்கால் வரை பரவுவதுண்டு. மருத்துவ மொழியில் இந்த நிலை பிளாண்டர் ஃபாஸ்சிடிஸ் (Plantar Fasciitis) என்று அழைக்கப்படுகிறது.
நம் பாதத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிளாண்டர் ஃபாஸியா (Plantar Fascia) எனப்படும் தசைநார் சவ்வில் ஏற்படும் உள்வீக்கம் காரணமாகவே இந்த வலி ஏற்படுகிறது. இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற பல வழிகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய ஒரு அருமையான வைத்தியம் உள்ளது.
Advertisment
சூடான நீர் - ஐஸ்கட்டி நீர் சிகிச்சை
இந்த சிகிச்சை மிகவும் எளிமையானது. ஒரு பக்கெட் சூடான நீர் (பாதம் பொறுக்கும் அளவு), ஒரு பக்கெட் ஐஸ்கட்டி நீர் எடுத்துக் கொள்ளவும்.
Advertisment
Advertisements
முதலில் உங்கள் பாதங்களை சூடான நீரில் 30 விநாடிகள் வைக்கவும்.
உடனடியாக, சூடான நீரில் இருந்து எடுத்து, ஐஸ்கட்டி நீரில் 30 விநாடிகள் வைக்கவும்.
இப்படியே மாற்றி மாற்றி, சூடான நீர் மற்றும் ஐஸ்கட்டி நீரில் உங்கள் பாதங்களை குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் வரை முக்கி எடுக்கவும்.
இந்த சிகிச்சையை தினமும் காலை ஒரு முறையும், மாலை ஒரு முறையும் செய்து வர, குதிகால் வலி படிப்படியாகக் குறைந்து குணமாவதை உணரலாம் என்று டாக்டர் வினோத் பரிந்துரைக்கிறார். இந்த எளிய வைத்தியம், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைத்து, குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.