விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
Advertisment
இதில் நடிகர்கள் மட்டுமல்ல, அந்த சீரியலில் வரும் வீடு கூட ரசிகர்களுக்கு பிடிக்கும். பெரிய தூண்கள், திண்ணையுடன் கூடிய வாசல், வீட்டுக்கு நடுவில் முற்றம், வெளியே தோட்டம் என பார்ப்பதற்கு அந்தகால பராம்பரிய செட்டிநாடு வீட்டை போல இருக்கும்.
பிறகு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், தாங்கள் தலைமுறையாக வாழ்ந்த வீட்டை விட்டு, வேறொரு வீட்டில் குடியேறினர்.இப்போது மீண்டும் அந்த வீட்டிலிருந்து இ.சி.ஆர்-ல் உள்ள புது வீட்டுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மாறியுள்ளது.
புது வீடு, அங்கு முதல் நாள் நடந்த ஷூட்டிங், போன்ற பல சுவாரஸ்ய விஷயங்களை ஹேமா, தன்னுடைய யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
‘நான் இன்னைக்கு உங்க எல்லாரையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டுக்கு கூட்டிட்டு போறேன். இதோட நம்ம 3வது வீடு மாத்துறோம். சீரியல் ஆரம்பிக்கும் போது செட்டிநாடு வீடு இருந்தது. அப்புறம் வேறொரு வீட்டுக்கு போனோம். இப்போ புது வீட்டுக்கு கிரஹ பிரவேசம் பண்ணிட்டு போயிருக்கோம்.
இந்த வீடு இ.சி.ஆர்.ல இருக்கு, ரொம்ப தூரம்… தினமும் ஏதோ ஊரு விட்டு ஊரு போயிட்டு வர்ற மாதிரி இருக்கு.
அந்த வீடு எப்படி இருக்குனுநீங்க எபிசோட்ல பாத்துருப்பீங்க. முதல் நாள் அங்க போகும் போது என்னடா இது? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கும், இந்த வீடுக்கும் செட் ஆகாத மாதிரி இருக்குன்னு, நான் யோசிச்சேன்.
ஏன்னா 4 தூணுக்குள்ள உட்காந்து தான் நம்ம கதையை பண்ணுவோம். இங்க எல்லாம் பெருசா இருந்தது, ஆனா போகபோக அது சரியாயிடும் நினைக்கிறேன், என்று இ.சி.ஆரில் உள்ள லொக்கேஷனுக்கு காரில் கிளம்புகிறார் ஹேமா…
'இதுதான் புது லொக்கேஷன், வீட்டுக்குள்ள நம்ம ரூமுக்கு போயிடலாம். இதுதான் இனிமேல் நம்ம ரெடியாக போற ரூம்.
இது சிம்பு அம்மாவோட தங்கச்சி லொக்கேஷன், அவுங்களோட ஷூட்டிங் ஹவுஸ் தான் இதெல்லாம் சொன்னாங்க.
வெளியில ஒருத்தங்க சிம்பு அம்மா மாதிரியே இருந்தாங்க, எனக்கு சரியா தெரியல. இங்கதான இருக்க போறோம். போகபோக பாத்துக்கலாம்'…
இப்படி பல விஷயங்களை ஹேமா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“