Advertisment

5 வருஷம் தொடர்ந்து ஒரு கேரக்டர்ல நடிக்கிறது… பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எமோஷனல்

இந்த 5 வருஷம் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல நான் இருந்திருக்கிறேன் நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு..

author-image
WebDesk
New Update
Meena Pandian stores

Hema Rajkumar

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இதில் ஜீவாவின் மனைவியாக மீனா கேரெக்டரில் நடித்த ஹேமா தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

Advertisment

இந்தத் தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் தொடரில் நடித்த மற்றும் பணிபுரிந்த அனைவரும் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் ஹேமா தன்னுடைய Hema’s  diary யூடியூப் சேனலில் பகிர்ந்த ஒரு வீடியோ இப்போது வைரல் ஆகியுள்ளது.

இன்னைக்கு நம்ம சீரியல்ல கிளைமாக்ஸ் ஷூட் பண்ணிட்டு இருக்காங்க. 5 வருஷம் தொடர்ந்து ஒரு கேரக்டர்ல நடிக்கிறது இப்போ இருக்கிற காலகட்டத்துல ரொம்ப கஷ்டமான விஷயம்.

இந்த 5 வருஷம் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல நான் இருந்திருக்கிறேன் நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. கடவுளுக்கு, வீட்டுல இருக்கிவங்க, புரொடக்ஷன், என்னோட ரசிகர்கள் எல்லாருக்குமே பெரிய நன்றி.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு நிறைய சப்போர்ட், நிறைய லவ் இப்போ வரை கிடைச்சுட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு பெரிய டிராவல் இதோட முடிய போகுதுன்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அழுதுற மட்டும் கூடாதுன்னு நான் உறுதியா இருக்கேன்.

ஷூட்டுக்கு அப்புறம் நாங்க 4 பேரும் இதேமாதிரி ஒரு ஃபங்ஷன் மூட்ல டிரெஸ் பண்ணி போட்டோ எடுக்க முடியுமா தெரியல. அதனால இப்போவே நாங்க போட்டோஸ் எல்லாம் எடுத்துட்டோம்.

இப்படி பல விஷயங்களை ஹேமா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment