இந்த நெல்லிக்காய் உருண்டைகளை, இப்படி செய்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் கால் கிலோ நறுக்கியது
2 ஸ்பூன் நெய்
நாட்டு சர்க்க்ரை கால் கப்
கொஞ்சம் உப்பு
அரை டீஸ்பூன் சீரகப் பொடி
கால் டீஸ்பூன் கரம் மசாலா
அரை டீஸ்பூன் மாங்காய் பொடி
துருவிய தேங்காய் கால் கப்
அரை டீஸ்பூன் பெப்பர் பொடி
அரை டீஸ்பூன் சுக்குப் பொடி
செய்முறை: நறுக்கிய நெல்லிக்காய்யை அரைத்துகொள்ள வேண்டும் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து நெல்லிக்காய் அரைத்ததை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து உப்பு, சீரகப் பொடி, கரம் மாசாலா, மாங்காய் பொடி, பெப்பர் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதன் சூடு ஆறியதும், துருவிய தேங்காயில் உருட்டி வைக்கவும்.